3 ஐ.எஸ் ஜிகாதிகளை மணந்த அமெரிக்க பெண்.. 2 வயது மகனுடன் முகாமில் படும் துன்பம்: உதவ மறுக்கும் டிரம்ப் அரசு

Report Print Basu in ஏனைய நாடுகள்

சிரியாவில் உள்ள அகதிகள் முகாமில் 2 வயது மகனுடன் வசித்து வரும் அமெரிக்காவில் பிறந்த பெண் மீண்டும் நாடு திரும்ப அனுதிக்ககோரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அமெரிக்காவில் பிறந்த ஹோடா முத்தானா, அமெரிக்கா கடவுச்சீட்டு மூலம் சிரியா நாட்டிற்கு சென்று அலபாமாவில் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார்.

தீவிரவாத சிந்தாந்தத்தைத் தழுவிய அவர், கடந்த 2014ம் ஆண்டு ஐ.எஸ் குழுவில் இணைந்து மூன்று ஐ.எஸ் தீவிரவாதிகளை திருமணம் செய்துள்ளார். ஆனால், மூவரும் மோதலில் கொல்லப்பட்டுள்ளனர்.

தற்போது சிரியாவின் வடகிழக்கில் குர்திஷ் போராளிகள் கட்டுப்பாட்டில் உள்ள அல்-ரோஜ் அகதிகள் முகாமில் தனது 2 வயது மகன் ஆடம் உடன் வசித்து வருகிறார் முத்தானா.

முகாமில் என்பிசி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த முத்தானா, ஐ.எஸ் குழுவில் இணைந்தததற்கு வருந்துகிறேன், மீண்டும் அமெரிக்காவிற்கு திரும்ப அரசு அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

கடவுளை நம்புகிற எவரும், அவர்கள் செய்த பாவங்கள் எவ்வளவு தீங்கு விளைவித்தாலும், அவர்கள் அனைவருக்கும் இரண்டாவது வாய்ப்பு தேவை என்று நம்புகிறேன். முகாமில் உள்ள ஐ.எஸ்-ஸை கைவிடாதவர்கள் தன்னை குறிவைக்கலாம் என்பதால் தான் உயிருக்கு அஞ்சுவதாக கூறியுள்ளார்.

மேலும், ஐ.எஸ்-ல் இணைந்த முதல் நாள் முதல் தலை துண்டிக்கப்படுவதை நான் ஆதரிக்கவில்லை, இப்போது வரை அவர்கள் செய்த எந்த குற்றங்களையும் தற்கொலை தாக்குதல்களையும் நான் ஆதரிக்கவில்லை என்று கூறினார்.

அமெரிக்காவின் கடவுச்சீட்டில் சிரியாவிற்கு பயணம் செய்திருந்த முத்தானா, அமெரிக்கா திரும்ப முயற்சிக்க வழக்குத் தாக்கல் செய்துள்ளார். நான் ஒரு அமெரிக்கா குடிமகன், அதை நிரூபிக்க என்னிடம் ஆவணங்கள் உள்ளன. நான் என் நாட்டில் தங்க விரும்புகிறேன் என்று என்பிசி-யிடம் கூறினார்.

அவர் ஒரு அமெரிக்க குடிமகன் அல்ல என்று வாதிட்டு, ஹோடா முத்தானாவை அமெரிக்காவிற்கு திரும்ப அனுமதிக்க அரசாங்கம் மறுத்து வருகிறது.

அந்த நேரத்தில் ஏமன் அரசாங்கத்தில் பணியாற்றும் ஒரு தூதரின் மகள் என்பதாலும், அவர் அமெரிக்காவில் பிறந்திருந்தாலும், அவர் அமெரிக்க குடிமகன் அல்ல என்று அமெரிக்கா அரசாங்கம் வாதிட்டுள்ளது.

அமெரிக்காவை தளமாகக் கொண்ட வெளிநாட்டு அதிகாரிகளின் குழந்தைகள் பிறப்புரிமையால் குடியுரிமையை பெறுவதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. பல அமெரிக்க பெண்களை குழந்தைகளுடன் ஏற்றுக்கொண்ட அமெரிக்க அரசாங்கம், முத்தானாவுக்கு மட்டும்அனுமதிக்க மறுத்தி வருகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்