மாணவர்களுக்காக கல்லறை தோண்டிய பல்கலைக்கழக நிர்வாகம்..! குவியும் கூட்டம்

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

நெதர்லாந்தில் உள்ள ஒரு கல்லூரி நிர்வாகம் மாணவர்களுக்காக கல்லறை ஒன்றினை தோண்டியுள்ளது.

தேர்வு காலங்களில் பதட்டங்களால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உதவ பல்வேறு முயற்சிகளை பல நிபுணர்களும் முயற்சித்து வருகின்றனர்.

நாய்களுடன் விளையாடி மகிழ்வது, நினைவாற்றல் கூட்டங்கள் மற்றும் அமைதியான இடங்களில் ஓய்வு எடுப்பது போன்ற முறைகளை பயன்படுத்தி வருகின்றனர்.

ஆனால் அவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்ட விதமாக, டச்சு நகரமான நிஜ்மெகனில் அமைந்துள்ள Radboud பல்கலைக்கழகம் புதிய அணுகுமுறையை வெளிப்படுத்தியுள்ளது.

அவர்கள் தங்களுடைய மாணவர்களின் பதட்டங்களை போக்குவதற்காக தேவாலயத்தின் பின்னால் ஒரு திறந்த கல்லறையை தோண்டியுள்ளனர்.

கல்லறைக்குள் 'வித்தியாசமாக இருங்கள்' என வசனம் கொண்ட ஒரு படுக்கை அமைக்கப்பட்டுள்ளது. இதன் புகைப்படமானது இணையத்தில் வைரலானதை அடுத்து, ஏராளமான மாணவர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

இதுகுறித்து மாணவர் சீன் மெக்லாலின் கூறுகையில், நானும் என்னுடைய அறை தோழரும் ஒரு வாரத்திற்கு முன் அந்த கல்லறைக்குள் செல்ல திட்டமிட்டிருந்தோம். ஆனால் அங்கு சென்ற போது ஏற்கனவே காத்திருப்போர் பட்டியல் பெரிதாக இருந்ததை அறிந்தோம்.

அதனால் எங்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் விரைவில் செல்ல திட்டமிட்டுள்ளோம் எனக்கூறியுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்