பாலியல் ரீதியாக பரவும் டெங்கு வைரல்... அதிர்ச்சி தகவலை வெளியிட்ட மருத்துவக்குழு

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

பாலியல் ரீதியாகவும் டெங்கு பரவும் என்பதை ஸ்பெயின் மருத்துவர்கள் முதன்முதலாக உறுதி செய்துள்ளனர்.

ஸ்பெயின் நாட்டை சேர்ந்த 41 வயதுடைய ஒரு ஆண் கடந்த செப்டம்பர் மாதம் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் டெங்கு வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பதை உறுதி செய்தனர். ஆனால் அவர் வசித்த இடம் டெங்கு பாதிப்பு இல்லாத பகுதி என்பதால், எப்படி பரவியது என்பதை மருத்துவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.

டெங்கு பாதிப்பு உள்ள பகுதிகளின் வழியாக அவர் பயணம் மேற்கொண்டதால் பரவியிருக்கலாம் என என ஒருசில கூற்றுக்கள் முன்வைக்கப்பட்டன. ஆனால் மருத்துவக்குழு அதனை நிராகரித்தது.

அதன்பிறகு மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், கியூபாவிற்கு சென்றிருந்த அந்த நபர், டெங்குவால் பாதிக்கப்பட்டிருந்த தன்னுடைய ஆண் கூட்டாளருடன் பாலியல் தொடர்பு வைத்திருந்தது தெரியவந்தது.

இந்த நிலையில் பாலியல் ரீதியாகவும் டெங்கு பரவும் என்பதை உறுதி செய்து மாட்ரிட் பொது சுகாதாரத் துறையின் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கொசுவினால் மட்டுமே டெங்கு பரவும் என்ற கூற்றை அடுத்து, பாலியல் தொடர்பு மூலமும் வைரஸ் பரவுவதாக அறிவிக்கப்பட்ட முதல் நிகழ்வு இதுவாகும்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்