இரையாக அனுப்பட்ட ஆடு... நட்பாக பழகிய புலி: இறுதியில் ஏற்பட்ட சோகம்!

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

ரஷ்யாவில் மிருகக்காட்சி சாலை ஒன்றில் இரையாக அனுப்பட்ட ஆடு புலிக்கு நட்பாக மாறியது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

ரஷ்யாவில் உள்ள மிருகக்காட்சி சாலையில் வசிக்கும் அமூர் என்ற புலிக்கு தைமூர் என்ற ஆடு கடந்த 2015-ம் ஆண்டு இரையாக அனுப்பப்பட்டது.

ஆனால், அந்த தைமூர் என்ற ஆடு மிகத் தைரியமாக இருந்ததை கண்ட புலி, அதனை கொன்று சாப்பிடுவதற்கு மனமில்லாமல் அதனுடன் நட்பாக பழகியது.

இதையடுத்து ஆடும் புலியும் ஒன்றாக சுற்றித் திரிந்ததை மிருக காட்சி சாலைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்தனர்.

இந்நிலையில், ஆடு அதிக தொல்லை கொடுத்ததால் ஆத்திரமடைந்த புலி, தைமூர் ஆட்டை கவ்வி தூக்கி வீசியதாக கூறப்படுகிறது.

இதில் காயமடைந்த ஆட்டுக்கு மிருகக்காட்சி சாலை அதிகாரிகள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அந்த ஆடு உயிரிழந்தாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்