விமானநிலையத்தில் வசமாக சிக்கிய பயணிகள்... என்ன இருந்தது தெரியுமா? வெளியான புகைப்படம்

Report Print Santhan in ஏனைய நாடுகள்

துபாயிலிருந்து சென்னை சரவதேச விமானநிலையத்திற்கு விமானத்தில் வந்திறங்கிய பயணிகளை சோதனை செய்த போது, அதில் இரண்டு பேர் கிலோ கணக்கில் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரியவந்துள்ளது.

வெளிநாட்டிலிருந்து தமிழகத்திற்கு வரும் பயணிகளில் சிலர் அங்கிருந்து தெரியாமல் ஏதேனும் விலைமதிப்புமிக்க பொருளை தெரியாமல் கடத்தி வருகின்றனர்.

அப்படி வருபவர்கள், விமானநிலைய அதிகாரிகளிடம் வசமாக சிக்கிவிடுவர். இது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் இன்று துபாயில் இருந்து எமிரேட்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான பயணிகள் விமானத்தில் வந்திறங்கிய பயணிகளிடம் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது குறித்த விமானத்தில் கேரளாவின் Ekarool-ஐ சேர்ந்த Thekkulla Kandy(41) என்பவரையும், அதே கேரளாவின் Haroon-ஐ சேர்ந்த Nahar Moyath (29) என்பவரை சோதனை செய்துள்ளனர்.

அப்போது அவர் தங்களுடைய பேன்ட்டின் பெல்ட் போடும் பகுதியில் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கைது செய்யப்பட்ட அவர்களிடம் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட அவர்களிடமிருந்து, தங்கம் சுமார் 1.82 கிலோ எடை இருந்ததாகவும், அதன் மதிப்பு 71.5 லட்சம் ரூபாய் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதே போன்று ஓமன் ஏர் பிளைட் நிறுவனத்திற்கு சொந்தமான பயணிகள் விமானம் கடந்த புதன் கிழமை சென்னை விமானநிலையத்திற்கு வந்தது. அதில் நாகப்பட்டினத்தை சேர்ந்த Mohamed Javid Mushar (22) என்ற நபர் கொண்டு வந்த பையை சோதனை செய்த போது, அதில் 26.5 கிலோ கொண்ட இராணியன் குங்குமப்பூ மறைத்து வைத்து கொண்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதன் மதிப்பு சுமார் 63.60 லட்சம் ரூபாய் வரும் என்றும், Mohamed Javid Mushar-யிடமும் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்