சிரியாவை சேர்ந்த சிறுமி ஈராக்கில் உள்ள அகதிகள் முகாமில் உள்ள நிலையில் அங்கிருந்து தன்னை அழைத்து செல்லுமாறு பிரித்தானியரிடம் கெஞ்சி கேட்ட வீடியோ வெளியாகி நெஞ்சை உருக்கியுள்ளது.
வடக்கு ஈராக்கில் அமைந்துள்ளது பர்தராஷ் அகதிகள் முகாம்.
இங்கு சிரிய அகதிகள் 12,000-க்கும் மேற்பட்டோர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் பிரித்தானியாவை சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனத்தை சேர்ந்த ரவீந்தர் சிங் என்பவர் உணவுகள் மற்றும் உடைகள் வழங்குவது போன்ற உதவிகளை செய்ய குறித்த அகதிகள் முகாமிற்க்கு சென்றனர்.
அப்போது அங்கிருந்த ரோஷின் என்ற சிறுமி ரவீந்தர் அருகில் வந்து Kurdish மொழியில் இந்த முகாமில் இருந்து என்னை வெளியில் அழைத்து செல்லுங்கள் என கெஞ்சியுள்ளார்.
இந்த விடயத்தை இணையத்தில் பதிவிட்டுள்ள ரவீந்தர், சிறுமி என்னிடம் வந்து Kurdish மொழியில் அதை கூறினார்.
மொழிபெயர்பாளர் மூலம் நான் அதை புரிந்து கொண்டேன், முகாமில் இருந்து வெளியேற வேண்டும் என அவள் என்னிடம் கேட்டது என் மனதை பிசைய செய்தது.
அங்குள்ள அனைத்து குழந்தைகளும் நம் குழந்தைகள் என்பதை நாம் உணர வேண்டும்.
அங்குள்ளவர்களுக்கு எங்கள் தொண்டு நிறுவனம் மூலம் தினமும் சுத்தமான குடிநீர் மற்றும் சூடான உணவுகளை கொடுத்து வருகிறோம்.
ஈராக் - சிரியா எல்லையை அகதிகள் இரவில் தான் பொதுவாக கடப்பார்கள், அப்போது அவர்கள் அங்குள்ள அதிகாரிகளுக்கு பணம் கொடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.