ரஷ்ய உளவு பிரிவிலிருந்து தப்பிய திமிங்கலம்: கடலில் மனிதர்களுடன் விளையாடும் வைரல் வீடியோ

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

கடலில் மனிதர்களுடன் ரக்பி விளையாடும் வெள்ளை திமிங்கலம் ரஷ்ய ராணுவ உளவுப்பிரிவிலிருந்து தப்பியதாக விஞ்ஞான எழுத்தாளர் சந்தேகம் கிளப்பியுள்ளார்.

கடலில் பயணம் செய்த தென்னாப்பிரிக்க ரக்பி ரசிகர்கள் குழுவினருடன், பெலுகா திமிங்கலம் ஒன்று விளையாடும் வீடியோ காட்சியானது இம்மாத துவக்கத்தில் இணையத்தில் வெளியிடப்பட்டது.

இந்த வீடியோ காட்சியானது தற்போது வரை சமூக ஊடகங்களில் 19 மில்லியனுக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டுள்ளது.

இணையதளவாசிகளை கவரும் இந்த திமிங்கலம் வேறு யாருமல்ல, ரஷ்ய கடற்படையால் பயிற்சியளிக்கப்பட்டதாக கருதப்படும் ஆண் பெலுகா என்ற ஹால்டிமிர் என்று கூறப்படுகிறது.

ரஷ்ய உளவு பிரிவிலிருந்து தப்பிய ஹவால்டிமிர் முதன்முதலில் நோர்வே அருகே 2019 ஏப்ரலில் காணப்பட்டது. அதன் உடலில் ஒரு சேணம் இணைக்கப்பட்டிருக்கும் மற்றும் "செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கின் உபகரணங்கள்" என்று ஒரு லேபிள் பொருத்தப்பட்டிருக்கும்.

அது உணவைக் கேட்பதற்கும் விளையாடுவதற்கும் படகுகளை அணுகுவதாக அறியப்படுகிறது. மனிதர்களின் கைகளால் உணவளிக்கப்பட்டு வந்ததால், தற்போது அதற்கு வெற்றிகரமாக வேட்டையாட முடியாமல் போனதாகவும் கருதப்படுகிறது.

நீர்வாழ் பாலூட்டிகளின் ஆராய்ச்சியாளரான குவாட் ஃபின் கூறியதை போலவே, வீடியோவில் உள்ள திமிங்கலம் ஹவால்டிமிராக இருக்கக்கூடும் என்று தான் நம்புவதாக ஃபெர்ரிஸ் ஜாப்ர் என்ற விஞ்ஞான எழுத்தாளரும் கூறியுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்