நீ என்னுடைய முயல்குட்டி... மனைவியை கொஞ்சிய முன்னாள் மன்னர்..! வெளியான புதிய வீடியோ

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்
281Shares

மலேசிய முன்னாள் மன்னரை பிரிந்து குழந்தையுடன் தனித்து வாழ்ந்து வரும் மொடல் அழகி தன்னுடைய திருமண வீடியோவை தற்போது வெளியிட்டுள்ளார்.

மலேசியாவின் முன்னாள் மன்னர் ஐந்தாம் முகமது (50), தன்னுடைய முன்னாள் மனைவியும், ரஷ்ய மொடல் அழகியுமான ஒக்ஸானா வோவோடினா (27) உடன் மகிழ்ச்சியாக திருமணம் செய்துகொண்ட வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

திருமணத்தின் போது மன்னர் மகிழ்ச்சியாக இல்லை என அவருடைய பணியாளர்கள் கூறியதற்கு, முற்றிலும் மாறாக இந்த வீடியோ அமைந்துள்ளது.

அந்த வீடியோ முழுவதிலுமே மகிழ்ச்சியுடன் திருமணம் செய்துகொண்டு, ஒக்ஸானாவை பார்த்து நீ என்னுடைய முயல்குட்டி என ரஷ்ய மொழியில் மன்னர் கூறுகிறார்.

அவர் ரஷ்ய மொழியில் பேச முயல்வதை பார்த்து 120 விருந்தினர்களும் சிரிக்கின்றனர். அவர்கள் முன், ஒக்ஸானா ஒரு 'நல்ல மனைவி' என்றும், 'மகிழ்ச்சியிலும் சோகத்திலும்' அவரை நேசிப்பேன் என சபதம் செய்தார்.

நவம்பர் 2018 இல் இந்த காட்சி படமாக்கப்படும் போது, ஒக்ஸானா 3 மாத கர்ப்பிணியாக இருந்தார். அந்த சமயத்திலே மொடல் அழகியின் வயிற்றில் வளரும் குழந்தைக்கு நான்தான் தந்தை என மன்னர் பெருமையுடன் கூறினார்.

ஆனால் அடுத்த சில நாட்களிலே மொடல் அழகி ஒரு ஆணுடன் நீச்சல் குளத்தில் இருக்கும் வீடியோ காட்சி உள்ளூர் ஊடகத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மன்னர், இஸ்லாமிய முறைப்படி தலாக் கூறி ஒக்ஸானாவை விவாகரத்து செய்தார்.

இதற்கு இரண்டு காரணங்களாக, இரகசிய ரஷ்ய திருமணத்தை மறைக்க வேண்டும் என மன்னர் விரும்பியபோது அது வெளியில் கசிந்ததாகவும், ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோவில் பங்கேற்ற ஒக்ஸானா நீச்சல் குளத்தில் ஆண் பங்கேற்பாளருடன் பாலியல் உறவு கொண்டதாகவும் கூறப்பட்டது.

இந்த குற்றச்சாட்டுக்களை ஆரம்பத்திலிருந்தே ஒக்ஸானா மறுத்து வரும் நிலையில் அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள், இருவரும் பிரிந்ததற்கு மிகப்பெரிய காரணங்கள் இருப்பதாக கூறுகின்றன.

அதேசமயம், குழந்தையின் தந்தைவழி குறித்து டி.என்.ஏ பரிசோதனைகளை வழங்கியதாக இரு தரப்பினரும் கூறுகிறார்கள். ஆனால் இதுபோன்ற சோதனைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்