24 வயது இளம் பெண்ணை கொலை செய்து உடல் பாகங்களை ஆற்றில் வீசிய 63 வயது பேராசிரியர்! அதிர்ச்சி சம்பவத்தின் சிசிடிவி காட்சி

Report Print Santhan in ஏனைய நாடுகள்
806Shares

ரஷ்யா பேராசிரியர் கொலை செய்யப்பட்ட இளம் பெண்ணின் உடல் பாகங்களை, மூன்று பைகளில் தனித் தனியாக கொண்டு வந்து அதை ஆற்று ஒன்றில் வீசியுள்ளது சிசிடிவி கமெரா மூலம் தெரியவந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

ரஷ்ய நிபுணரும் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் மாநில பல்கலைக்கழகத்தின் பேராசிரியருமான Oleg Sokolov(63),இளம் பெண்ணான Anastasia Yeschenko(24) கொலை சம்பவத்தில் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.

விசாரணையின் போது, அவர் வைத்திருந்த பையில் இளம்பெண்ணின் இரண்டு கைகள் மற்றும் ஒரு துப்பாக்கி இருந்தததால், இது தொடர்பான விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.

இதனால் அவருடைய வீட்டிற்கு சென்று அதிகாரிகள் சோதனை நடத்திய போது, அதில் குறித்த பெண்ணின் தலை மட்டும் துண்டாக இருப்பதைக் கண்டு பொலிசார் அதிர்ச்சியடைந்தனர்.

Oleg Sokolov ஏற்கனவே திருமணமானவர், அவரின் மனைவி புற்றுநோயால் பரிதாபமாக உயிரிழந்தார். அவருடைய மனைவி பள்ளி ஆசிரியை என்பதால், அப்போது தான் Anastasia Yeschenko 16 வயதில் அறிமுகமாகியுள்ளார்.

அதன் பின் இந்த இளம் பெண்ணிடம் பேராசிர்யர் தொடர்பில் இருந்ததாகவும், அங்கிருக்கும் சில ஊடகங்கள் அவரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டதாகவும் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் தான் ஒரு நிகழ்ச்சியின் போது இருவருக்கும் கடுமையான வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது தான் ஆத்திரத்தின் உச்சிக்கு சென்ற Oleg Sokolov அவரை நான்கு முறை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துள்ளார்.

அதன் பின் அவரின் உடல் பாகங்களை இரம்பத்தால் அறுத்து தனியாக எடுத்து சென்று St Petersburg-வில் இருக்கும் Moyka ஆற்றில் வீசியுள்ளார். இந்த காட்சி அங்கிருந்த சிசிடிவி கமெராவில் பதிவாகியுள்ளது. கிட்டத்தட்ட இவர் தான் என்று பொலிசார் உறுதி செய்துள்ளனர்.

(Image: social media / east2west news)

தற்போது அந்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. மேலும் இது தொடர்பான விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதால் அவருக்கு 15 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்பிருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் இறந்தது அவர் தான் என்பதை உறுதி செய்வதற்காக இளம் பெண்ணின் தாய் Galina Yeschenko கிரான்ஸ்னோடர்விலிருந்து வந்துள்ளார். அவர் அதிகாரிகளிடம், அவளுக்கு பேராசியருக்கும் தனிப்பட்ட பிரச்சனை இருப்பது குறித்து அவள் எதுவும் கூறவில்லை.

(Image: VK.com)

ஆனால் இந்த சம்பவத்தை கேட்டவுடன் அதிர்ச்சியடைந்தேன் என்று மட்டும் கூறியுள்ளார். தொடர் விசாரணைக்கு பின்னரே இந்த கொலை சம்பவத்தின் உண்மை பின்னணி தெரியவரும்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்