பாஸ்போர்ட் இல்லாமல் விமானத்தின் உள்ளே நுழைந்து பயணி செய்த திடுக் செயல்... அதிர்ச்சியில் உறைந்த சக பயணிகள்

Report Print Santhan in ஏனைய நாடுகள்
386Shares

ஸ்பெயினில் பயணிகள் விமானத்தில் பயணி ஒருவர் பாஸ்போர்ட் மற்றும் அனுமதி சீட்டு இல்லாமல் விமானத்தின் உள்ளே நுழைந்ததால், சற்று நேரம் பரபரப்பு நிலவியது.

ஸ்பெயின் தலைநகர் பார்சிலோனா விமானநிலையத்தில் இருந்து Dublin-க்கு Vueling flight நிறுவனத்திற்கு சொந்தமான பயணிகள் விமானம் இன்று உள்ளூர் நேரப்படி 12.40 மணியளவில் புறப்பட தயாராக இருந்துள்ளது.

இதற்காக விமானத்தில் பயணிகளை சோதித்து, விமான அதிகாரிகள் உள்ளே அனுப்பி கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று ஒருநபர் விமான ஊழியர்களை தாண்டி, விமானத்தின் உள்ளே பயணிகளோடு, பயணியாக இருந்துவிட்டதால், விமான ஊழியர்கள் உடனடியாக இது குறித்து விமானநிலைய அதிகார்களுக்கு தெரிவித்தனர்.

அதன் பின் விரைந்து வந்த விமான நிலைய அதிகாரிகள், விமானத்தின் உள்ளே இருந்த பயணிகள் அனைவரையும் மீண்டும், பாஸ்போர்ட் மற்றும் அனுமதி சீட்டை எடுத்து வைக்கும் படி கூறியுள்ளனர்.

(Image: Twitter)

அதன் படி விமான ஊழியர்கள் சோதனை செய்து வந்து கொண்டிருந்த போது, முதலில் முன் பக்க இருக்கையில், இருந்த அந்த நபர் உடனடியாக அங்கிருந்து ஓடி விமானத்தின் கழிவறையை அடைத்து உள்ளே இருந்து கொண்டார்.

இதனால் விமானத்தில் இருந்த பயணிகள், ஒரு வேளை வெடி குண்டு ஏதேனும் வைத்திருப்பானோ? எதற்காக பாத்ரூமிற்குள் சென்று கதவை அடைத்துக் கொண்டான் என்று பீதியில் உறைந்தனர்.

அதன் பின் அதிகாரிகள் அவனை வெளியில் கொண்டு வந்து கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் அந்த நபர் விமானநிலையத்தில் போலி பாஸ்போர்ட்டை காண்பித்து வந்துள்ளான் எனவும், அதன் பின் விமானத்தின் உள்ளே நுழைந்தவுடன் பயத்தில் இப்படி செய்துள்ளதாக அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

கைது செய்யப்பட்ட நபர் எந்த நாட்டை சேர்ந்தவர்? பெயர்? விவரம் போன்றவை வெளியாகவில்லை.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்