இரவு முழுவதும் போனில் கேம் விளையாடிய நபருக்கு நேர்ந்த கதி... எச்சரிக்கை தகவல்! வெளியான புகைப்படம்

Report Print Santhan in ஏனைய நாடுகள்

சீனாவில் தொடர்ந்து போனில் விளையாடிக் கொண்டிருந்த இளைஞர் தற்போது கண் பார்வை இழந்து பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

சீனாவின் Shenzhen பகுதியை சேர்ந்த இளைஞர் இரவு முழுவதும் தன்னுடைய மொபைல் போனில் கேம் விளையாடியுள்ளார்.

தொடர்ந்து பல மணி நேரங்கள் விளையாடிய இவர், அதன் பின் சில நிமிடங்கள் விட்டு காலையில் மொபைல் போனில் கேம் விளையாடியுள்ளார்.

விளையாட துவங்கிய ஐந்து நிமிடங்களுக்கு பின் இடது கண் தெரியாமல் போயுள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த குறித்த இளைஞன் உடனடியாக அருகில் இருக்கும் Shenzhen Songgang மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை மேற்கொண்டுள்ளான்.

அப்போது அவரை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் இரவு முழுவதும் தொடர்ந்து கேம் விளையாடியதால், இடது கண்ணின் பார்க்கும் திறன் இழந்துள்ளது.

இதனால் அவருக்கு லேசர் அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்கள், தற்போதைக்கு அவரால் பார்க்க முடியாது எனவும், சரியாக ஒரு மாதம் ஆகும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

மொபைல் போன் கேம்மில் தீவிரமாக இறங்கியதால், அந்த இளைஞன் தற்போது பார்வை இழந்து நிற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளான்.

இதனால் மொபைல் போன் பயன்படுத்துவோர் குறிப்பாக இரவு நேரங்களில் வெளிச்சம் இல்லாத இடத்தில் அதிக நேரம் பயன்படுத்த வேண்டாம் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்