196 பேருடன் தரையிரங்கிய விமானத்தில் பற்றி எரிந்த தீ! வெளியான திக் திக் நிமிடத்தின் சிசிடிவி காட்சி

Report Print Santhan in ஏனைய நாடுகள்

எகிப்தில் 196 பேருடன் தரையிரங்கிய பயணிகள் விமானத்தில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டதால், உடனடியாக தீயணைக்கப்பட்டு, பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேறிய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

உக்ரனைனின் Zaporizhzhia-விலிருந்து எகிப்தின் Sharm El Sheikh விமானநிலையத்திற்கு SkyUp நிறுவனத்திற்கு சொந்தமான பயணிகள் விமானம் ஒன்று 189 பயணிகள் ஏழு விமான ஊழியர்கள் என மொத்தம் 196 பேருடன் புறப்பட்டு சென்றுள்ளது.

விமானம் Sharm El Sheikh விமானநிலையத்திற்கு வந்திறங்கிய போது விமானத்தில் hydraulic fluid(ஒரு வகை திரவம்) கசிந்து, அது விமானத்தின் டயரில் பட, அப்போது தரையிரங்குவதற்காக மெதுவாக பிரேக் பிடிக்கப்படட்தால் தீ பற்றியுள்ளது.

இதனால் விமானத்தின் இடது டயர் பகுதியில் தீப்பிடித்ததால், உடனடியாக இது குறித்து விமானநிலைய அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு படையினருக்கு தெரிவிக்கப்பட்டது.

அதன் பின் சில நிமிடங்களில் அங்கு விரைந்த அவர்கள், விமானத்தில் பற்றி எரிந்த தீயினை அணைத்தனர். இதில் பயணிகள் யாருக்கும் காயம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த சம்பவத்தின் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளதால், தற்போது அந்த வீடியோ வெளியாகியுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்