விமான நிலையத்தில் அதிகாரிகளை ஏமாற்றிய இளைஞனுக்கு நேர்ந்த கதி! என்ன செய்தார் தெரியுமா?

Report Print Santhan in ஏனைய நாடுகள்

ரஷ்யாவில் அதிக எடையுடைய பூனை ஒன்றால் விமான நிறுவனம் தனக்கு வழங்கிய சலுகைகளை இளைஞர் ஒருவர் இழந்துள்ளார்.

லாட்வியா தலைநகர் ரிகாவில் இருந்து ரஷ்யாவில் உள்ள விளாடிவோஸ்டாக் நகருக்கு சமீபத்தில் மிகைல் காலின் என்ற நபர் விமான பயணம் மேற்கொண்டுள்ளார்.

அப்போது அவர் தன்னுடன், தன் செல்லப்பிராணியான விக்டர் எனும் பூனையையும் அழைத்துச் சென்றுள்ளார். விமான சேவை நிறுவனத்தின் விதிகளின் படி எட்டு கிலோவுக்கு மேல் எடையுள்ள பூனைகளை விமானத்தில் கொண்டு செல்ல அனுமதியில்லை

அதிக எடையுடைய பூனை இருந்தால், மயக்கமடையச் செய்து சரக்கு வைக்கும் பகுதியில் எடுத்துச் செல்ல வேண்டும். எடை அதிகமாக இருக்கும் செல்லப்பிராணிகள் இப்படி தான் விமானத்தில் கொண்டு செல்லப்படும்.

இந்நிலையில் மிகைல் தன் பயணத்தின்போது ரிகா நகரில் இருந்து மாஸ்கோ வந்து, அங்கிருந்து விளாடிவோஸ்டாக் நகருக்கு வேறு விமானத்தில் செல்ல வேண்டியிருந்தது.

அவர், ரிகா நகரில் விமானத்தில் ஏறியபோது, 10 கிலோ உள்ள தனது பூனைக்கு பதிலாக எடை குறைவான வேறொரு சிறிய பூனையைக் காட்டி விமானத்தில் ஏறியுள்ளார்.

அதன் பின், மாஸ்கோ நகரில் இரண்டாவது விமானத்தில் ஏறும்போது பூனை விக்டரின் எடை திடீரென இரண்டு கிலோ அதிகமானதைக் கண்டு விமான நிறுவனத்தின் ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இதனால், மிகைலின் பூனை பூனையை உள்ளே கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை.

அதன் பின் அவர், வேறு ஒருவரின் எடை குறைவான பூனையை வாங்கி விமான ஊழியர்களிடம் கணக்கு காட்டிவிட்டு, வழக்கம்போல தனது பூனையை உள்ளே கொண்டு சென்றுள்ளார்.

உள்ளே செல்வதற்கு முன் வழியனுப்ப வந்த அந்த சிறிய பூனையின் உரிமையாளரிடம் கொடுத்துவிட்டு, தனது பெரிய பூனையை மிகைல் வாங்கி சென்றுள்ளார்.

இதையடுத்து அவர் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் விமானநிறுவனத்தை ஏமாற்றியது எப்படி? என்று பதிவேற்றம் செய்ய, அந்த பதிவு வைரலானது, இது விமான நிறுவனத்தின் கண்ணில் பட்டதால், விமான நிறுவனம் இது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளது.

அதன் பின் அது உறுதியானதால், விமான நிறுவனம் அவருக்கு கூடுதல் தூரம் செல்வதற்காக வழங்கியிருந்த சலுகைகளை பறித்தது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்