விமானநிலையத்தில் அதிகாரிகளிடம் வசமாக சிக்கிய பயணி! ஷாம்பு பாட்டில்களில் பல கோடி மதிப்புள்ள பொருள்

Report Print Santhan in ஏனைய நாடுகள்

அமெரிக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் கொலாம்பியாவை சேர்ந்த பயணியிடம் சோதனை மேற்கொண்ட போது, அந்த நபர் சுமார் 7 கோடி ரூபாய் மதிப்புள்ள போதை மருந்தை ஷாம்பு பாட்டில்களில் கடத்த முயன்றதை கண்டுபிடித்தனர்

அமெரிக்காவின் George Bush சர்வதேச விமானநிலையத்தில் கடந்த வியாழக்கிழமை சுங்க அதிகாரிகள் பயணிகளை சோதனை மேற்கொண்டிருந்தனர்.

அப்போது கொலாம்பியா நாட்டை சேர்ந்த 26 வயது மதிக்கத்தக்க இளைஞனின் பையை சோதனை செய்தனர். அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

அதிகாரிகளிக்கு சந்தேகம் ஏற்பட்டதால், பையை முழுமையாக சோதனை செய்த போது, அதன் உள்ளே 2 டஜன் அளவிற்கு 24 ஷாம்பு பாட்டில்கள் இருந்துள்ளது.

அதில் உள்ளே இருந்ததை அதிகாரிகள் சோதித்து பார்த்த போது, அது ஒரு வகை போதை மருத்து(liquid cocaine) என்பதை கண்டுபிடித்தனர். இப்படி 24 பாட்டில்களிலும் சோதித்து பார்த்த போது, அதில் அனைத்திலும் போதை பொருள் என்பது கண்டுபிடிக்கப்பட்டதால், அந்த நபர் உடனடியாக கைது செய்யப்பட்டு, கொலாம்பியாவிற்கு நாடு கடத்தப்பட்டார்.

இது குறித்து உயர் அதிகாரி கூறுகையில், எங்கள் அதிகாரிகள் தங்கள் நாட்டிற்குல் நுழையும் பயணிகளை தீவிரவமாக சோதனை மேற்கொள்வர், பல்வேறு வகைகளில் கடத்தல் நடத்தப்பட்டு வருகிறது. liquid cocaine இந்த வகை போதை பொருளை இப்படி கடத்துவது அவர்களுக்கு எளிதாகிறது.

ஷாம்பு, குழந்தைகள் விளையாடும் பொம்பைகள், சில உணவுகள், சாக்லெட் போன்றவைகளிலும் கடத்தல் நடக்கிறது என்று கூறினார்.

நாடு கடத்தப்பட்ட நபரின் முழு தகவல்களை விமானநிலைய அதிகாரிகள் தெரிவிக்கவில்லை, ஆனால் அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஷாம்பு பாட்டில்களில் இருந்த போதை மருந்தின் மதிப்பின் சுமார் 400,000 அமெரிக்க டொலர்(இலங்கை மதிப்பில் 7,21,53,080 கோடி ரூபாய்) என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்