பேச்சு மூச்சில்லாமல் ரத்தவெள்ளத்தில் குழந்தை... நடுரோட்டில் உதவி கேட்டு கதறிய தாய்

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

21வது மாடியில் இருந்து உலோகத்துண்டு விழுந்ததில் தலையில் ரத்தம் வழிந்தோட, குழந்தையை கட்டியணைத்தபடியே தாய் ஒருவர் நடுரோட்டில் உதவி கேட்டு கதறியுள்ளார்.

கிழக்கு சீனாவின் ஜெஜியாங் மாகாணத்தின் டோங்யாங் நகரில் வியாழக்கிழமையன்று இந்த சம்பவம் நடந்துள்ளது.

ஜாங் லிங்ஃபாங் என்கிற தாய் நர்சரி பள்ளி முடிந்ததும் தன்னுடைய மூன்று வயது மற்றும் 10 மாத வயதுடைய மகனை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு சென்றுள்ளார்.

இரண்டு சிறுவர்களும் தாயின் கையை பிடித்துக்கொண்டு வாழைப்பழம் சாப்பிட்டபடியே நடந்துகொண்டிருந்துள்ளனர்.

அப்போது திடீரென அந்த 10 மாத சிறுவன் மயங்கி தரையில் சரிந்துள்ளான். அவனுடைய தலையில் இருந்து இரத்தம் வழிந்தோடுவதை பார்த்த ஜாங் லிங்ஃபாங், இறுக அணைத்தபடியே உதவி கேட்டு கூச்சலிட்டுள்ளார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள், குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு 5 மணி நேரம் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

சிகிச்சைக்கு பின்னர் குழந்தைக்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டது.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், ஜூ (29) என்கிற தொழிலாளி வீடு புனரமைக்கும் பணியின்போது 21 மாடியிலிருந்து உலோகத்தாலான பைப் துண்டினை தவறவிட்டிருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து அவரை கைது செய்துள்ள பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்