ஏவுகணை தாக்குதலுக்கு பதிலடி- இஸ்ரேல் குண்டு வீச்சு! சண்டை நிறுத்த ஒப்பந்தம் ?

Report Print Abisha in ஏனைய நாடுகள்

ஏவுகணை தாக்குதலுக்கு பதிலடியாக ஹமாஸ் மீது இஸ்ரேல் சனிக்கிழமை குண்டு வீசி தாக்குதல் நடத்தியது.

பாலஸ்தீனத்திலிருந்து நாடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலுக்கு பதிலடியாக ஹமாஸ் நிலைகள் மீது இஸ்ரேல் சனிக்கிழமை தாக்குதல் நடத்தியது.

காஸாவில், பாலஸ்தீன் இஸ்லாமிய ஜிகாத்(பிஜஜே) அமைப்பின் கட்டுப்பாட்டு பகுதியில் இஸ்ரேலுக்கு இடையில் நடத்த மோதலில், ஹமாஸ் அமைப்பு இது வரை தலையிடவில்லை.

இந்த இடைவெளிக்குப் பிறகு தற்போது முதல் முறையாக ஹமாஸ் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து இஸ்ரேல் ராணுவம் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,”ஹமாஸ் கட்டுப்பாட்டிலுள்ள காஸா பகுதியிலிருந்து இரு ஏவுகணைகள் இஸ்ரேலை நோக்கி வீசப்பட்டன. அந்த இரு ஏவுகணைகளும் இஸ்ரேலின் வான்பாதுகாப்பு ஏவுகணைகள் மூலம் இடைமறித்து அழிக்கப்பட்டன.

இந்தத் தாக்குதலுக்குப் பதிலடியாக, காஸாவின் வடக்குப் பகுதியில் உள்ள இரு ஹமாஸ் நிலைகள் மீது இஸ்ரேல் விமானங்கள் தாக்குதல் நடத்தின.அத்துடன், பயங்கரவாதிகளின் சுரங்க அமைப்பு ஒன்றின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது”.

சண்டை நிறுத்தம் மீறல்: ஹமாஸ் நிலைகள் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டு வீசிய உடனேயே, அதற்கு எதிா்வினையாக பிஐஜே கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்து ஏவுகணைகள் வீசப்பட்டன. அதையடுத்து தாக்குதல் எச்சரிக்கை சைரன்கள் ஒலித்ததால், இஸ்ரேலின் தெற்கு மற்றும் மத்தியப் பகுதியில் வசித்தவா்கள் பதுங்கு குழிகளை நோக்கி ஓடியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இதற்கும் பதிலடி கொடுக்கும் வகையில், பிஐஜே நிலைகள் மீதும், ஏவுகணை ஏவுதளங்கள் மீதும் இஸ்ரேல் விமானங்கள் தாக்குதல் நடத்தின எனவு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலுக்கும், பிஐஜே அமைப்புக்கும் இடையே கடந்த வியாழக்கிழமை முதல் சண்டை நிறுத்த ஒப்பந்தம் அமலில் இருந்தும், அந்த ஒப்பந்தத்தை மீறி ஒவ்வொரு முறை பிஐஜே அமைப்பு ஏவுகணைத் தாக்குதல் நடத்தும்போதும், அதற்குப் பதிலடியாக அந்த அமைப்பின் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்