இலங்கை தேர்தலில் வெற்றி பெற்ற கோத்தபாயவுக்கு மாலத்தீவு ஜனாதிபதி வாழ்த்து!

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்
118Shares

இலங்கை தேர்தலில் வெற்றி பெற்றுள்ள கோத்தபாய ராஜபக்சவுக்கு மாலத்தீவின் ஜனாதிபதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் இலங்கை பொது ஜன முன்னணி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச வெற்றி பெற்றுள்ளார்.

அவர் வரும் 20ஆம் திகதி ஜனாதிபதியாக பதவியேற்பார் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் கோத்தபாயவுக்கு மாலத்தீவு ஜனாதிபதி இப்ராஹிம் முகமது சோலி டுவிட்டரில் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

இது குறித்த அவர் பதிவில், இலங்கை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள கோத்தபாய ராஜபக்சவுக்கு அன்பான வாழ்த்துக்கள்.

மாலத்தீவுக்கும் இலங்கைக்கும் இடையில் ஏற்கனவே உள்ள நெருக்கமான மற்றும் சகோதரத்துவ உறவுகளை மேலும் மேம்படுத்த உங்கள் புதிய நிர்வாகத்துடன் இணைந்து பணியாற்ற எதிர்நோக்குகிறேன் என பதிவிட்டுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்