வெளிநாட்டில் சிசிடிவியால் காப்பாற்றப்பட்ட இந்தியரின் உயிர்: பொலிஸாரின் நெகிழ்ச்சி செயல்

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

மாரடைப்பால் துடித்த இந்தியருக்கு ஐக்கிய அமீரக பொலிஸார் இலவசமாக அறுவை சிகிச்சை மேற்கொண்டு காப்பாற்றியுள்ளனர்.

இந்தியாவை சேர்ந்த ஓத்மான் முகமது என்பவர், ஐக்கிய அமீரகத்தில் ராஸ் அல் கைமா காவல்துறை கட்டிடத்தில் 29 ஆண்டுகளாக தோட்டக்காரராக பணிபுரிந்து வருகிறார்.

கடந்த சில தினங்களுக்கு முன் அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு நெஞ்சை பிடித்துக்கொண்டிருந்துள்ளார்.

சிசிடிவியில் இதனை பார்த்த பொலிஸார் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என கூறியுள்ளனர். இதனையடுத்து அறுவை சிகிச்சை செய்வதற்காக இந்தியா செல்ல வேண்டும் என முகமது கோரியுள்ளார்.

ஆனால் அவருடைய உறவினர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுப்பதற்காக ஐக்கிய அரபு அமீரகத்தில் அறுவை சிகிச்சை பெறுவதற்கான அனைத்து நடைமுறைகளையும் பொலிஸார் ஏற்பாடு செய்துள்ளனர்.

மேலும், முகமதுவின் பெற்றோர் இந்தியாவிலிருந்து ஐக்கிய அமீரகத்திற்கு வந்து சேர்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பொலிஸாரே செய்துள்ளனர்.

அதன்பிறகு அல் காசிமி மருத்துவமனையில் அவருக்கு 7 மணி நேரத்தில் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்