12 வயது சிறுவன் சொன்ன காரணம்... ஸ்கேன் ரிப்போர்ட்டை பார்த்து அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள்!

Report Print Santhan in ஏனைய நாடுகள்

சீனாவில் இரண்டு மாதங்களாக கடுமையான வயிற்று வலியால அவதிப்பட்டு வந்த 12 வயது சிறுவனின் ஸ்கேன் ரிப்போர்ட்டை கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

சீனாவின் Hubei மாகாணத்தின் Wuhan-ஐ சேர்ந்த 12 வயது சிறுவன் கடந்த இரண்டு மாதங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளான்.

ஆனால் அதை அவன் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை, இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு வயிற்று வலி அதிகமாக அவன் உடனடியாக மருத்துவமனைக்கு சென்றான்.

(Picture: AsiaWire / Wuhan Children’s Hospital)

அங்கு மருத்துவர்கள் முதலில் இது இரைப்படை குடல் பிரச்னையாக இருக்கலாம் என்று நினைத்துள்ளனர். ஆனால் அது போன்று தெரியாத காரணத்தினால், சிறுவனிடம் நீ ஏதேனும் செய்தாயா? என்று தனியாக கேட்டுள்ளனர்.

அப்போது சிறுவன் 70 நாட்களுக்கு முன்னர், தன்னுடைய மர்ம உறுப்பில் சிறிய வகை காந்த பந்துகளை சொருகியதாக கூறியுள்ளான்.

இதையடுத்து மருத்துவர்கள் ஸ்கேனில் பார்த்த போது, சிறுநீர் பையில் சுமார் 30-க்கும் மேற்பட்ட பந்துகள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

(Picture: AsiaWire)

இதை மீட்டெடுப்பது மிகவும் கடினம் என்பதால், மருத்துவர்கள் சிறு நீர் பையினுள் காற்றை செலுத்தி எடுக்க முடிவு செய்துள்ளனர்.

அதன் படி அறுவை சிகிச்சை செய்யாமல், காற்றை செலுத்தி சிறுநீர் பையில் இருந்த 31 பந்துகளை எடுத்துள்ளனர். தொடர்ந்து சிகிச்சை மேற்கொண்டு வரும் சிறுவன் விரைவில் குணமடைவான் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...