உறுப்பு தானம் செய்த நபர்: அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

30 ஆண்டுகளாக புகைப்பழக்கத்திற்கு அடிமையாகியிருந்த நபரின் நுரையீரலானது கருப்பு நிறத்தில் இருக்கும் வீடியோ காட்சி ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

சீனாவை சேர்ந்த 52 வயது நபர் ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன் பல்வேறு நுரையீரல் நோய்களால் பாதிக்கப்பட்டு ஜியாங்சுவில் உள்ள வூக்ஸி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு நோயாளி சிகிச்சை பலனின்றி இறந்த பிறகு தனது உறுப்புகளை தானம் செய்ய கையெழுத்திடப்பட்டது. அதன்பேரில் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணரான மருத்துவர் சென் தலைமையில் உறுப்புகளை பிரித்தெடுக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.

வீடியோவை காண...

அப்போது அவருடைய நுரையீரல் ஆரோக்கியமான இளஞ்சிவப்பு நிறத்திற்கு மாற்றாக கரி நிறத்தில் இருந்துள்ளது. மேலும் அவருடைய நுரையீரலை சுற்றிலும் புகையிலை எச்சங்கள் அடைத்திருந்துள்ளன.

அப்போது தான் அவர் 30 வருடங்களாக புகைபிடிக்கும் பழக்கத்திற்கு அடிமைப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவருடைய உடலில் எந்த உறுப்பையும் பயன்படுத்த முடியாது என்பதை மருத்துவர்கள் உறுதி செய்தனர்.

இந்த நிலையில் அறுவை சிகிசிச்சை மேற்கொண்ட வீடியோ காட்சியினை மருத்துவக்குழு இணையத்தில் வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவானது 25 மில்லியனுக்கும் அதிகமான இணையதளவாசிகளால் பார்க்கப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்