ஈவு இரக்கமின்றி.. உதவிகேட்ட பெண்ணை நடுரோட்டில் வைத்து சுட்டுக்கொன்று கூலாக நடந்து சென்ற நபர்: திகிலூட்டும் காட்சி

Report Print Basu in ஏனைய நாடுகள்

பிரேசில் நாட்டில் பிச்சைக்கேட்ட பெண்ணை, நபர் ஒருவர் நடுரோட்டில் வைத்து சுட்டுக்கொன்ற சம்பவம் வீடியோவாக வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நிடேரோய் பகுதியிலே இச்சம்பவம் அரங்கேறியுள்ளது. கெல்லப்பட்ட பெண் வீடற்ற 31 வயதான நெயா என்கிற ஜில்டா ஹென்ரிக் டோஸ் சாண்டோஸ் என தெரியவந்துள்ளது.

இக்கொடூர செயலில் ஈடுபட்ட அடர்பால் ராமோஸ் டி காஸ்ட்ரோ என்ற கொலைகாரனை பொலிசார் கைது செய்துள்ளனர். குறித்த கொலைக்காட்சியை உள்ளுர் ஊடகமான ரெடெ டி.வி ஒளிபரப்பியுள்ளது, இதைக்கண்ட மக்கள் அதிர்ச்சிடைந்துள்ளனர்.

சம்பவத்தின் போது நெயா, சாலையில் நடந்து சென்றுக்கொண்டிருந்த காஸ்ட்ரோவிடம் 1 பிரேசிலியன் ரியல் கேட்டுள்ளார். இதனால், கடுப்பான காஸ்ட்ரோ, தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து நெயாவை சுட்டுள்ளார்.

இதில், நெயா நடுரோட்டில் சுருண்டு விழ காஸ்ட்ரோ ஏதும் நடக்காதது போல் நடந்து சென்றுள்ளார். நெயா சுடப்பட்டு கிடந்தை கண்ட அங்கிருந்து நபர், அவருக்கு உதவியளித்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.

எனினும், மருத்துவமனையில் நெயாவை சோதித்த மருத்துவர்கள் இறந்துவிட்டதாக அறிவித்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்