நடுவானில் விமானிக்கு ஏற்பட்ட துயரம்: அவசர அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

ரஷ்யாவில் விமானி ஒருவர் நடுவானில் மாரடைப்பால் அவதிக்கு உள்ளான நிலையில் குறித்த விமானம் அவசரமகா தரையிறக்கப்பட்டது.

தொடர்புடைய விமானம் தரையிறக்கப்படும் முன்னரே அந்த விமானி தமது இருக்கையில் வைத்தே மரணமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இருந்து புறப்பட்ட Aeroflot விமானம் ஒன்றில் 49 வயது நபர் விமானியாக செயல்பட்டுள்ளார்.

விமானம் 33,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருக்கும்போது திடீரென்று அந்த விமானிக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

உடனடியாக விமானத்தை பிளாட்டோவ் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்க அனுமதி தேடியுள்ளனர்.

(Image: AIF Rostov-on-Don)

இதனிடையே மருத்துவ உதவிக்குழுக்களும் பிளாட்டோவ் சர்வதேச விமான நிலையத்தில் தயாராகவே இருந்துள்ளனர்.

ஆனால் விமானம் தரையிறங்கும் முன்னர் குறித்த விமானி அவரது இருக்கையில் வைத்தே மரணமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

விமானியின் நிலை கவலைக்கிடமாக இருந்த போது, விமான ஊழியர் ஒருவர், பயணிகளில் மருத்துவர் எவரேனும் இருக்கிறார்களா என விசாரித்ததாக பெண் பயணி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்