சீனாவில் உள்ள Luxshare நிறுவனம் வடிவமைத்துள்ள விரைவில் இரைச்சல்களை குறைக்கக்கூடிய AirPods Pro அறிமுகம் செய்யப்படவுள்ளது.
தற்போது AirPods சாதனத்தின் பாவனையானது உலகெங்கிலும் வெகுவாக அதிகரித்து வருகின்றது.
இப்படியிருக்கையில் மாதம் தோறும் சுமார் 1 மில்லியன் தொடக்கம் 2 மில்லியன் வரையான AirPods சாதனங்கள் விற்பனையாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தகவலை Nikkie நிறுவனம் வெளியிட்டுள்ளது.
வயர்லெஸ் முறையில் இதனைப் பயன்படுத்தக்கூடியதாக இருக்கின்றமையே பயனர்களை அதிகம் கவர்வதாகவும், இதுவே அதிகம் விற்பனையாவதற்கான காரணம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.