நாடாளுமன்றத்தில் காதலை சொன்ன எம்.பி! வாழ்த்துகளுடன் கிடைத்த பதிலோ?

Report Print Abisha in ஏனைய நாடுகள்

தனது தோழியிடம் காதலை கூறிய எம்.பிக்கு நாடாளுமன்றத்தில் வாழ்த்துகள் குவிந்த நிலையில், அவர் தோழி என்ன பதிலளித்தார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இத்தாலியின் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது, எம்.பியான ஃப்ளாவியோ டி மியூரோ தனது வாதத்தை துவங்கினார்.

அதில் பேசிய அவர், “நாட்டுக்கான நலன்களை செய்வதிலும் , அக்கறைக் கொள்வதிலேயே எப்போதும் கவனம் செலுத்துகிறோம். இதனால் தினமும் நமக்காக வாழ்வோரை, நம் மீது அன்பு செலுத்துவோரை , உண்மையான உறவுகளை கண்டுகொள்ளாமல் உதாசினம் செய்கிறோம். இன்று எனக்கு சிறப்பான நாள். எலிசா என்னை திருமணம் செய்து கொள்வாயா..?”

என்று அவரது பெண் தோழியும், நாடாளுமன்ற உறுப்பினருமாக எலிசாவிடம் கேட்டார். அப்போது உடன் இருந்த மற்ற எம்.பிகள் அவருக்கு கைதட்டி உற்சாகத்தையும் வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.

அப்போது சபாநாயகர், உங்களை நான் புரிந்துகொள்கிறேன். ஆனால், நாடாளுமன்றத்தை இப்படி பயன்படுத்தி கொள்வது முறையல்ல என்று தெரிவித்தார்.

இறுதியாக செய்தியாளர்கள் அந்த எம்.பியிடம் எலிசா என்ன கூறினார் என்று கேட்டபோது, ஆம் என்று தெரிவித்தார் என்று பதிலளித்துள்ளார். ஆனால், இன்னும் திருமண திகதி முடிவு செய்யவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்