ஒவ்வொரு ஆண்டும் 4 செமீ அளவுக்கு மூழ்கும் கிராமம்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

புவி வெப்பமயமாதல் பிரச்னையால் கடல்நீர் மட்டம் அதிகரித்துள்ளதால் பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள Sitio Pariahan என்ற கிராமம் வெள்ளத்தில் மிதக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இதனால் குறித்த கிராம மக்கள் கடலுக்கு நடுவே வீடுகட்டி குடியிருப்பதைப்போல வசித்து வருகின்றனர்.

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவிலிருந்து 17 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள Sitio Pariahan கிராமம், ஒவ்வொரு ஆண்டும் சுமார் 4 சென்டிமீற்றர் அளவிற்கு மூழ்கிக் கொண்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

நீர்மட்டத்தின் உயரம் அதிகரிக்க அதிகரிக்க கிராம மக்கள் மூங்கில்களை கொண்டு வீட்டின் உயரத்தையும் உயர்த்தி வருகின்றனர்.

அடிப்படை வசதிக்கே அல்லாடும் இந்த கிராமம்,‌ சூரிய மின்‌சக்தி மூலமே மின்சாரம் பெறுகிறது. இங்கிருக்கும் ஒரே ஒரு கிணறுதான் முக்கிய நீர் ஆதாரமாகவும் உள்ளது.

REUTERS/ELOISA LOPEZ

இந்த கிராமத்து மக்கள், கிணற்று நீரையே, குடிக்கவும், குளிக்கவும், சமையலுக்கும் பயன்படுத்துகின்றனர்.

இந்த கிராமத்திலிருந்த நீதிமன்றமும், தேவாலயமும் கடந்த 2011 ஆம் ஆண்டு ஏற்பட்ட புயலில் மூழ்கடிக்கப்பட்டது.

Sitio Pariahan கிராமத்தைச் சேர்ந்த 16 வயதான டானிகா மார்டினெஸ், சுமார் அரை மணிநேர படகுப் பயணத்திற்கு பிறகு பாடசாலைக்கு செல்வதாகவும்,

சில நேரங்களில் பெரிய அலைகளால் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும் கூறுகிறார். தான் நன்றாக படித்து நல்ல‌ வேலைக்கு சென்‌ற பின்னர் தனது குடும்பத்தை இந்த கிராமத்திலிருந்து வேறு இடத்திற்கு அழைத்துச் சென்றுவிடுவேன் என டானிகா உருக்கமாக தெரிவித்துள்ளார்.

REUTERS/ELOISA LOPEZ
REUTERS/ELOISA LOPEZ
REUTERS/ELOISA LOPEZ
REUTERS/ELOISA LOPEZ

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்