பிறந்த குழந்தையை கழிவறை குழிக்குள் போட்ட தாய்! அடுத்து செய்த செயல்.. அங்கு வந்த பெண் கண்ட காட்சி

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

Honduras நாட்டில் பிறந்த குழந்தையை கழிவறை குழிக்குள் போட்டு கொல்ல பார்த்த தாயின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Choluteca பகுதியை சேர்ந்த தில்சியா மரியா என்ற பெண் சில தினங்களுக்கு முன்னர் அங்குள்ள மருத்துவமனைக்கு சென்றார்.

நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவருக்கு மருத்துவமனை கழிவறைக்குள் குழந்தை பிறந்தது.

பின்னர் கழிவறை கதவு வழியாக இரத்தம் வெளியேறுவதை பார்த்த டோரிஸ் என்ற பெண் அங்கு சென்று பார்த்த போது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

அப்போது மரியா தனது குழந்தையை கழிவறை குழிக்குள் போட்டு தண்ணீர் ஊற்றி கொல்ல பார்த்தார்.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த டோரிஸ் கத்திய நிலையில் அங்கு வந்த ஊழியர்கள் குழந்தையை மீட்டனர்.

அப்போது அங்கு மருத்துவர்கள் வந்த போது அந்த குழந்தை தனக்கு பிறக்கவில்லை என கூறி மரியா அதிரவைத்தார்.

பின்னர் மரியா மற்றும் குழந்தைக்கு சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில் இருவரும் நலமுடன் இருப்பதாக தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக தகவலறிந்த பொலிசார் சம்பவ இடத்துக்கு வந்து மரியாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணை முடிவில் தான் எதற்காக தனது குழந்தையை மரியா கொல்ல பார்த்தார் என்பது குறித்த விபரம் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...