பாலத்திலிருந்து தவறி ஆற்றில் விழுந்த பேருந்து: குழந்தைகள் உட்பட 19 பேர் பலி... 21 பேர் படுகாயம்

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

22அடி உயர பாலத்திலிருந்து பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் குழந்தைகள் உட்பட 19 பயணிகள் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாஸ்கோவிலிருந்து கிழக்கே 3,930 மைல் தொலைவில் உள்ள குயங்கா ஆற்றில், ஓட்டுநர் உட்பட 43 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த பேருந்து 22 அடி உயரத்தில் இருந்து தவறி ஆற்றில் விழுந்துள்ளது.

ஆறு ஆழமற்றதாகவும், அதன் முழு ஆழமும் உறைந்திருந்ததாலும், பேருந்து பனிக்கு அடியில் மூழ்கவில்லை. விபத்திற்கு காரணம் பேருந்தின் டயர் பழுதானதாகவும், மற்றொன்று பாலத்திலிருந்து நழுவியதாகவும் கூறப்படுகிறது.

ஞாயிற்றுக்கிழமை இருட்டிற்குப் பிறகும் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

சம்பவத்தை நேரில் பார்வையிட்ட பிராந்திய ஆளுநர் அலெக்சாண்டர் ஒசிபோவ், 19 பேர் உயிரிழந்ததாகவும், 21 பேர் பல்வேறு காயங்களுடன் உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.

20 வருட அனுபவம் வாய்ந்த, மிகவும் கவனத்துடன் பேருந்தை இயக்கக்கூடிய டிரைவர், செர்ஜி குபசோவ் (43) இந்த விபத்தில் கொல்லப்பட்டிருப்பதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விபத்து குறித்து குற்றவியல் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...