சிறுமியை சீரழித்து கழுத்தை நெரித்து கொன்ற கொடூரன்: சடலத்தையும் சிதைத்தது அம்பலம்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

ரஷ்யாவில் இளைஞர் ஒருவர் தன்னுடன் படுக்கையை பகிர்ந்துகொள்ள மறுத்த சிறுமியை சீரழித்து கொன்றுவிட்டு, சடலத்துடனும் உறவு கொண்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

ரஷ்யாவின் Lesozavodsk நகரில் குடும்பத்துடன் குடியிருக்கும் 17 வயது சிறுமி தமது நண்பரான அந்த இளைஞரை சந்திக்க சென்றுள்ளார்.

ஆனால் மூன்று நாட்களுக்கு பின்னரும் அவர் குடியிருப்புக்கு திரும்பாத நிலையில், அவரது பெற்றோர் பொலிசாருக்கு புகார் தெரிவித்துள்ளனர்.

புகாரின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்ட பொலிசார், உசூரி ஆற்றின் பாலத்தின் அருகே நிர்வாண நிலையில் மாயமான சிறுமியின் சடலத்தை மீட்டுள்ளனர்.

தொடர்ந்து சிறுமியின் மொபைல் போனை பரிசோதித்த பொலிசார், அதில் பதிவாகியுள்ள தகவலின் அடிப்படையில் அவரது நண்பரான அன்டன் மெகெட் என்பவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

Credit: Central European News

கொல்லப்பட்ட சிறுமியுடன் பொதுவான சந்திப்புக்கு ஒப்புக்கொண்ட இளைஞர் பின்னர் உறவுக்கு கட்டாயப்படுத்தியுள்ளார்.

அதற்கு மறுப்பு தெரிவித்த சிறுமியை கடுமையாக தாக்கி, சீரழித்துள்ளார் அன்டன் மெகெட்.

பின்னர் குற்றத்தை மறைக்க சிறுமியை கொலை செய்துள்ளார். குற்றவாளியை பொலிசார் கைது செய்துள்ளனர்.

உடற்கூராய்வில், சிறுமியின் சடலத்துடனும் அன்டன் மெகெட் உறவு வைத்துக் கொண்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த வழக்கின் விசாரணை எதிர்வரும் நாட்களில் தொடரும் என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

Credit: Central European News
Credit: Central European News

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...