என் தந்தைக்கு பதிலாக என்னை கொலை செய்யுங்கள்! கதறி அழுது துடித்த 13 வயது சிறுமி.. மனதை உலுக்கும் வீடியோ

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

ஈரானில் தந்தைக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து அவரின் மகள் கதறி அழும் வீடியோ வெளியாகி காண்போர் மனதை உலுக்கியுள்ளது.

ஈரானை சேர்ந்த நபர் மீது அந்நாட்டு சட்டத்தை மீறி செய்த குற்றம் ஒன்றுக்காக வழக்கு தொடரப்பட்டது.

இதையடுத்து நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்து அதிரடியாக தீர்ப்பளித்தது. இதையடுத்து அவர் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அப்போது சிறைக்கு வாசலில் மரண தண்டனை விதிக்கப்பட்ட நபரின் 13 வயது மகள் வந்தார்.

பின்னர் தந்தையை நினைத்து கதறி அழுதபடி, கடவுளே காப்பாற்றுங்கள். என் தந்தையை நான் 4 ஆண்டுகளாக பார்க்கவில்லை.

அவரை நான் பார்க்க வேண்டும், என் தந்தையில்லாமல் என்னால் வாழ முடியாது.

அவரை கொல்லாதீர்கள், அதற்கு பதிலாக என்னை கொல்லுங்கள் என கதறியபடி இருந்தார்.

இதையடுத்து அருகிலிருந்தவர்கள் அவரை தேற்ற முயற்சித்தனர். இதன் பின்னர் அந்த சிறுமியின் நிலை குறித்த விபரம் தெரியவில்லை.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்