மருத்துவர் நிர்வாணமாக அளித்த சிகிச்சை காட்சியை ஆபாச இணையதளத்தில் பார்த்து அதிர்ந்த பெண் நோயாளிகள்!

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

உக்ரைனில் உள்ள மருத்துவமனையில் தாங்கள் சிகிச்சை பெறும் காட்சிகள் ஆபாச இணையதளத்தில் இருப்பதை கண்ட பெண் நோயாளிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

உக்ரைனின் ஒடீசா நகரில் உள்ள பிரபலமான மருத்துவமனையில் Vyacheslav Tripolko என்பவர் மருத்துவராக உள்ளார்.

இந்நிலையில் அங்கு வரும் பெண் நோயாளிகளுக்கு நிர்வாண நிலையில் படுக்க வைக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகிறது.

அந்த காட்சியை அங்கு சிகிச்சை பெற்ற ஒரு பெண் ஆபாச இணையதளத்தில் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

east2west news

இது குறித்து மேலும் சிலரும் சேர்ந்து பொலிசில் புகார் அளித்த நிலையில் மருத்துவர் Vyacheslavவிடம் விசாரிக்கப்பட்டது.

அப்போது அந்த மருத்துவமனையின் அறையில் ரகசிய கமெரா பொருத்தப்பட்டிருப்பதை பொலிசார் கண்டுபிடித்துள்ளனர்.

ஆனால் இதுவரை Vyacheslav கைது செய்யப்படவில்லை, ஆனால் அவரின் மருத்துவம் பார்க்கும் ஒப்பந்தம் தொடர்பிலான ஆவணங்கள் ரத்து செய்யப்பட்டது.

தன் மீதான குற்றச்சாட்டுகளை Vyacheslav மறுத்துள்ள நிலையில் தங்கள் மருத்துவமனையில் புதிதாக அலாரங்கள் பொருத்தப்பட்டதாகவும், அப்போது அதை பொருத்திய நபர்கள் நைசாக ரகசிய கமெராக்களை பொருத்தியிருக்கலாம் எனவும் அவர் பொலிசாரிடம் கூறியுள்ளார்.

இது குறித்து சம்மந்தப்பட்ட மருத்துவமனையின் தலைவர் Oleg Lukyanchuk கூறுகையில், இந்த குற்றச்சாட்டு என்னை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

இந்த நாட்டின் குடிமகனாகவும், ஒரு மருத்துவராகவும் நான் திகைத்து போயுள்ளேன் என கூறியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் தொடர்ந்து பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Source

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்