எனது மகன் உயிருக்கு ஆபத்து: மலேசிய மன்னரின் முன்னாள் மொடல் மனைவி!

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

மலேசிய முன்னாள் மன்னர் ஐந்தாம் முகமதுவின் முன்னாள் மொடல் மனைவியான ஒக்சானா (27), தனது மகனின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக தெரிவித்துள்ளதைத் தொடர்ந்து பொலிசார் விசாரணையில் இறங்கியுள்ளனர்.

முன்னாள் ரஷ்ய அழகியும் மொடலுமான ஒக்சானா, மலேசிய மன்னர் ஐந்தாம் முகமதை திருமணம் செய்திருந்த நிலையில், திடீரென மன்னர் தங்கள் திருமண உறவை முறித்துக்கொண்டார்.

அதைத்தொடர்ந்து ஒக்சானாவுக்கு பிறந்தது தனது குழந்தைதானா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

இப்படி இருவருக்குமான உரசல்கள் தொடர்ந்து வரும் நிலையில், தற்போது தனது குழந்தையின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக ஒக்சானா தெரிவித்துள்ளார்.

ஒக்சானாவுக்கு மன்னர் சார்பில் வழங்கப்பட்டு வந்த உதவிகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், அவர் ஊடகங்களுக்கு பேட்டி அளிக்கக்கூடாது என மிரட்டப்பட்டுள்ளதாகவும் அவர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஜீவனாம்சம் கோரி அவர் தொடுத்துள்ள வழக்கை வாபஸ் பெறுமாறும் அவர் எச்சரிக்கப்பட்டுள்ளாராம்.

இதனால் பயந்து போயுள்ள ஒக்சானா, மாஸ்கோவை விட்டு வெளியேறி வேறொரு இடத்தில் தற்போது மறைவாக வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.

தனது மகன் உயிருக்கு ஆபத்து இருப்பதாக அவர் புகார் தெரிவித்துள்ளதையடுத்து, ரஷ்ய பொலிசார் விசாரணை ஒன்றை துவக்கியுள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்