சாலைகளில் சிதறிக்கிடந்த உடல்பாகங்கள்... துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட நோயாளி: வீடியோ

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

பயங்கரமான துப்பாக்கி மற்றும் ஆயுதங்களுடன் மர்ம கும்பல் ஒன்று மெக்ஸிகன் மருத்துவமனையில் இருந்து நோயாளியை கடத்தி சென்று துண்டித்து கொலைசெய்துள்ளது.

நவம்பர் 21 ஆம் தேதி மெக்சிகோ நகரத்திலிருந்து வடமேற்கே 160 மைல் தொலைவில் அமைந்துள்ள சால்வதியேராவின் பொது மருத்துவமனையில் இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.

ஆறுக்கும் அதிமான ஆயுதமேந்திய சில ஆண்கள் கூட்டம் திடீரென மருத்துவமனையில் புகுந்து அங்கிருந்த காவலாளியை பணயக்கைதியாக பிடித்ததோடு, அவர்களின் இலக்கான நபரை ஒவ்வொரு அறையிலும் தேடி இறுதியாக அங்கிருந்து கடத்தி சென்றுள்ளனர்.

மருத்துவமனையை தாக்கிய கடத்தல்காரர்கள், கட்டிடத்தை விட்டு வெளியேறும் வரை காவல்துறையினரைத் தொடர்புகொள்வதைத் தடுக்க மருத்துவமனை ஊழியர்களிடமிருந்து செல்போன்களை கைப்பற்றியதாக கூறப்படுகிறது.

பின்னர் சிறிது நேரம் கழித்து டோரஸ் லாண்டாவில் ஒரு ரவுண்டானாவுக்கு பொலிசார் வரவழைக்கப்பட்டனர். அங்கு ஒரு நபரின் சிதறிய உடல் வெள்ளைத் தாளில் வைக்கப்பட்டிருந்தது. அதன் அருகே ஒரு குறிப்பும் இருந்துள்ளது.

குறிப்பு பற்றி எந்த தகவலும் தெரிவிக்காத பொலிஸார், அந்த உடல் மருத்துவமனையில் இருந்து கடத்தி செல்லப்பட்ட நோயாளி என்பதை மட்டும் உறுதி செய்துள்ளனர்.

அடையாளம் காணப்படாத நோயாளியின் உடல் பாகங்கள் பல சாலையோரங்களில் சிதறிக் கிடந்ததாக கூறப்படுகிறது.

துப்பாக்கி ஏந்தியவர்கள் யார் அல்லது அவர்கள் ஏன் நோயாளியை குறிவைத்தனர் என்பது இன்னும் தெரியவில்லை. எவ்வாறாயினும், ஆயுதமேந்தியவர்கள் கடந்த மாதமும் ஜுவென்டினோ ரோசாஸ் மற்றும் அபாசியோ எல் கிராண்டே ஆகிய இரு மருத்துவமனைகளில் நுழைந்தனர். அங்கு அவர்கள் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் அனுமதிக்கப்பட்ட ஆண் நோயாளிகளைக் கடத்தி கொலை செய்தனர் என்பது தெரியவந்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்