எமனையே இருமுறை ஏமாற்றிய இளைஞர்: சரமாரியாக மோதிக்கொண்ட 20 கார்கள்

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

பாரிய கார் விபத்தை தடுக்க முயன்ற ஒருவர், இரண்டு முறை சக்கரத்தில் சிக்காமல் அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்துள்ளார்.

தென்கொரிய தலைநகர் சியோலுக்கு அருகிலுள்ள குவாங்ஜு வோன்ஜு அதிவேக நெடுஞ்சாலை சந்திப்பில் நேற்று தெளிவான பனி படர்ந்திருந்ததால், அதனை அறிந்திராத வாகன ஓட்டிகள் சரமாரியாக ஒன்றன் மீது ஒன்றாக மோதியுள்ளனர்.

இதனால் மிகப்பெரிய விபத்து ஏற்படாமல் தடுக்க அங்கிருந்த ஒரு நபர் மட்டும், கைகளை அசைத்து கார்களை நிறுத்துமாறு எச்சரித்துள்ளார்.

ஆனால் சாலையில் கட்டுப்பாட்டை இழந்த இரண்டு கார் அவர் மீது மோதுவதை போல சென்று, அதிர்ஷ்டவசமாக விலகி சென்றது.

இந்த பகுதியில் வெறும் 30 நிமிடங்களில் 20க்கும் அதிகமான கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், 87 வயதான பெண் உட்பட மூன்று பேர் பலத்த காயமடைந்திருப்பதாகவும் கூறியுள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்