ரியல் ஹீரோ! மகளுக்காக தினமும் 12 கி.மீ பயணம்: தந்தையின் செயலுக்கு குவியும் பாராட்டு

Report Print Santhan in ஏனைய நாடுகள்
254Shares

தந்தை ஒருவர் தன் மகளின் கனவிற்காக தினமும் அவரை இரு சக்கர வாகனத்தில் அழைத்து சென்று, அங்கே காத்திருந்து அதன் பின் அவரை மீண்டும் வீட்டிற்கு அழைத்து வருவதால், இவர் தான் ரியல் ஹீரோ என்று அவர்களின் புகைப்படத்தை இணையவாசிகள் பகிர்ந்து வருகின்றனர்.

Saif Ali என்ற டுவிட்டர் வாசி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தந்தை மற்றும் மகள் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு, அதில் இவர் தான் உண்மையான ஹீரோ, இவர் பெயர் Mia Khan இவர் தன்னுடைய மகளின் படிப்பிற்காக தினமும் மகளை 12 கி.மீற்றர் இருசக்கர வாகனத்தில் அழைத்து செல்கிறார்.

அதன் பின் பள்ளி முடியும் வரை 4 மணி நேரம் அங்கே காத்திருந்து மீண்டும் மகளை அழைத்து வருகிறார். அவர் படிப்பறிவு இல்லாதவர், அவருடைய கிராமத்தில் மருத்துவர் இல்லாததால், மகளை நன்றாக படிக்க வைத்து மருத்துவர் ஆக்க வேண்டும் என்ற குறிக்கோளில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்