180 புலம்பெயர்ந்தோருடன் கடலில் மூழ்கிய கப்பல்

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்
229Shares

180 புலம்பெயர்ந்தோருடன் ஐரோப்பாவிற்கு அபாயகரமான பயணத்தை மேற்கொண்ட கப்பல் கவிழ்ந்திருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

ஒரு வாரத்திற்கு முன் ஆப்பிரிக்க நாடான காம்பியாவிலிருந்து பெண்கள், குழந்தைகள் என குறைந்தபட்சம் 150 பேர் ஐரோப்பா நோக்கி அபாயகரமான கப்பல் பயணத்தை மேற்கொண்டனர்.

எரிபொருள் மற்றும் உணவைப் பெறுவதற்காக மவுரித்தேனிய கடற்கரையை நெருங்கியபோது கப்பல் கவிழ்ந்ததாக கூறப்படுகிறது.

இதில் பலர் நீரில் மூழ்கியதாகவும், குறைந்தது 83 பேர் நீந்தியே அருகிலுள்ள மவுரித்தேனியன் கடற்கரையை அடைந்ததாகவும் ஐ.நா. குடியேற்ற நிறுவனத்திற்கான மவுரித்தேனியா தலைமைத் தலைவர் லாரா லுங்கரோட்டி கூறியுள்ளார்.

10 பேர் அவசர சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருப்பதாகவும், மாயமானவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

படகில் கவிழ்ந்தபோது 180 பேர் வரை இருந்தனர். அவர்களில் பெரும்பாலோர் 20 முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள் என்று உள்துறை மந்திரி மொஹமட் சேலம் ஓல்ட் மெர்சூக் கூறியுள்ளார்.

கவிழ்ந்த படகு நவம்பர் 27 அன்று காம்பியாவிலிருந்து புறப்பட்டதாக தப்பியவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்