நடுத்தெருவில் கைவிட்டு சென்ற உரிமையாளரை தேடிய நாய்: நெஞ்சை உருக்கும் வீடியோ

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

நடுத்தெருவில் கைவிட்டு சென்ற உரிமையாளரை, அவருடைய வளர்ப்பு நாய் தேடி அலையும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

மெக்ஸிகோ நகரத்தில் உள்ள கொயோகான் நகராட்சியில் நடந்த ஒரு சம்பவத்தை ‘ஜோசு கொரியா’ என்கிற பேஸ்புக் பயனாளர் தன்னுடைய பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில், நான் என்னுடைய வளர்ப்பு நாயுடன் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்த போது, இந்த நாயினை அதன் உரிமையாளரான ஒரு பெண்ணும் அவருடைய மகளும் கைவிட்டு காரில் செல்ல முயற்சித்தனர்.

"நான் இதை பதிவு செய்வதற்கு முன்பு நாய் காரின் பின்னால் ஓடிக்கொண்டிருந்தது. நாய் காரில் ஏற விரும்புவதை நீங்கள் தெளிவாகக் காணலாம், ஆனால் அவர்கள் அதைப் புறக்கணிக்கிறார்கள்" என பதிவிட்டிருந்தார்.

இதனை பார்த்த இணையதளவாசிகள் பலரும் கோபத்துடன் கருத்து பதிவிட்டு வருகின்றனர். தற்போதுவரை 288,000 க்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. மேலும் 18000க்கும் அதிகமானோரால் பகிரப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்