இரண்டு பேரை உயிருடன் துடி துடிக்க எரித்து கொன்ற கும்பல்! தெரியவந்த காரணம்? அதிர்ச்சி வீடியோ

Report Print Santhan in ஏனைய நாடுகள்

மெக்சிகோவில் தங்கள் எதிரி குழுவிடமிருந்த சிக்கிய இரண்டு பேரை அந்த குழுவினர் உயிருடன் எரித்து கொள்ளும் வீடியோ காட்சி வெளியாகி பார்ப்போரை அதிர்ச்சியடைய வைக்கிறது.

மெக்சிகோவின் Reynosa நகரத்திலே இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. இந்த நகரம் அங்கிருக்கும் இரண்டு குழுக்குகளிடையே யுத்த பூமியாக இருக்கிறது. ஏனெனில் இரண்டு குழுக்களுமே இதை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து கொள்ள நினைக்கின்றனர்,

அதில் ஒரு குழுவின் பெயர் Los Metro எனவும் மற்றொரு குழுவின் பெயர் Matamoros அல்லது Escorpiones என்றும் கூறப்படுகிறது.

Reynosa-வில் இருக்கும் குறிப்பிட்ட பகுதியை Los Metro குழுவினர் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். இதை Matamoros குழுவினர் தங்கள் பலம் மூலம் பெற முயற்சிக்கின்றனர்.

இதன் காரணமாக அந்த நகரத்தில் துப்பாக்கிச் சத்தம் அதிகமாக கேட்கும், எனவும் ஒருவரை ஒருவர் மிகவும் மோசமாக தாக்கி கொள்வதால், இரத்த பூமி போன்று காட்சியளிக்கும் என்று அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் தற்போது Los Metro குழுவினர் தங்களின் எதிரிகளாக கூறப்படும், Matamoros பிரிவை சேர்ந்த இரண்டு பேரை பிடித்து, அவர்களை ஒரு காட்டுப்பகுதிக்கு கொண்டு வந்து, அவர்கள் மீது தீயை வைக்கின்றனர்.

இதனால் தீயில் சிக்கிய அவர்கள் வலி தாங்க முடியாமல் கதறுகின்றனர், துடிக்கின்றனர், அதிலும் இரக்கம் காட்டாமல் Los Metro குழுவில் இருக்கும் நபர் தீயில் கருகிக் கொண்டு நபரை நோக்கி துப்பாக்கியால் சுடுகிறார்.

இந்த வீடியோவை அவர்கள் சமூகவலைத்தளங்களில் பதிவேற்றி அப்பகுதியில் இருப்பவர்களுக்கும், எதிரிக்கும் பயத்தை ஏற்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்