உன் அழகான சிரிப்பு எங்கே போனது? மகன் பக்கத்தில் படுத்து அழுத அப்பா.. நெஞ்சை உருக்கும் புகைப்படங்கள்

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

தென் ஆப்பிரிக்காவில் பிறக்கும் போதே இதயத்தில் ஆறு விதமான குறைபாடுகளுடன் பிறந்த குழந்தை பல்வேறு சிகிச்சைகளை பெற்று வலியுடன் போராடிய நிலையில் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Centurion-ஐ சேர்ந்த பிரன்ஸ் - ஸ்டீபனி தம்பதிக்கு கடந்தாண்டு ஜூன் மாதம் ஆண் குழந்தை பிறந்தது.

குழந்தைக்கு நாதன் என பெயர் வைக்கப்பட்ட நிலையில் பிறக்கும் போதே அவனுக்கு இதயத்தில் ஆறு விதமான கோளாறுகள் இருப்பது தெரியவந்தது.

தொடர்ந்து பல்வேறு சிகிச்சைகள் மற்றும் ஆப்ரேஷன்கள் நாதனுக்கு செய்யப்பட்ட நிலையில் கடந்த வாரம் ஐந்து மணி நேரம் இதய அறுவை சிகிச்சையை மருத்துவர்கள் மேற்கொண்டனர்.

ஆனால் சிகிச்சை முடிந்தும் அவன் இதயத்தின் துடிப்பு சரிய தொடங்கிய நிலையில் நாதன் கடந்த வாரம் திங்கள் உயிரிழந்தான்.

இதையடுத்து கண்ணீருடன் அவன் உடலுக்கு பெற்றோர்கள் இறுதிச்சடங்கு செய்தனர்.

இதையடுத்து நேற்று நாதனுக்கு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்வு தேவாலயத்தில் நடைபெற்றது.

இதன்பின்னர் பேசிய நாதன் தாய், ஒன்றரை வயதிலேயே எங்களை விட்டு நீ சென்றுவிட்டாய், உன் அழகான சிரிப்பு இப்போது இல்லை.

நீ இப்போது எங்கிருக்கிறாய்? என் கையில் தவழும் நீ இப்போது அங்கு இல்லையே நாதன். உன்னை என்னால் எப்போதும் மறக்க முடியாது, என் இதயத்தில் எப்போதும் நீ இருப்பாய் என கண்ணீருடன் கூறினார்.

நாதனுக்கு சிகிச்சையளித்த மருத்துவர் மார்டின் கூறுகையில், நாதன் என் சொந்த குழந்தை என்பதை போல அவன் இறப்பை நினைத்து அழுதேன்.

நான் எந்தவொரு நோயாளிக்கு சிகிச்சையளிக்கும் போது நாதன் என்னுடன் இருப்பதாக நினைத்து கொள்கிறேன்.

அழகான பூவை போன்ற நாதன் இன்னும் வேதனையை அனுபவிக்கக்கூடாது என்பதற்காக தான் கடவுள் அவனை அழைத்து கொண்டார் என நினைக்கிறேன் என கூறியுள்ளார்.

இதனிடையில் நாதன் சிகிச்சை பெற்ற போது எடுக்கப்பட்ட நெஞ்சை உருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்