கன்னித்தன்மையை இணையத்தில் விற்பனைக்கு வைத்த இளம்பெண்: அவர் சொன்ன காரணம்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

உக்ரைன் நாட்டவரான 19 வயது இளம்பெண் ஒருவர் தமது கன்னித்தன்மையை பேர்போன இணையதளம் ஒன்றில் விற்பனைக்காக பதிவு செய்துள்ளார்.

தற்போது அமெரிக்காவில் குடியிருக்கும் கட்யா என்ற 19 வயது இளம்பெண் தமது கற்புக்கு 84,000 பவுண்டுகள் விலையிட்டுள்ளார்.

உலக நாடுகள் பலவற்றை சுற்றிப் பார்க்க வேண்டும் எனவும் சொகுசு சாழ்க்கை வாழ வேண்டும் என்பதே தமது கனவு எனவும், அதை சாத்தியப்படுத்த தமது கற்பை விற்க அவர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் மருத்துவர் ஒருவரால் உரிய சோதனைக்கு பின்னர் தாம் கற்புடன் இருப்பதை உறுதி செய்துள்ளதாக கூறும் அவர், எனது உடல் எனது தெரிவு என காணொளி ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக பலர் தம்மை சமீபித்துள்ளதாக கூறும் கட்யா, செல்வந்தர்கள் எவரேனும் மாதம் 8,400 பவுண்டுகள் கட்டணத்தில் தமது சேவையை பயன்படுத்துவதாக இருந்தால் வரவேற்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இளம்பெண்கள் தங்கள் கன்னித்தன்மையை விற்பனைக்கு வைக்கும் இந்த இணையதளமானது, இதுபோன்ற சேவைகளை மேற்கொள்வதில் பேர்போன ஒன்றாகும்.

இங்கு இதுவரை பலர் தங்கள் கன்னித்தன்மையை விற்க உள்ளதாக விளம்பரம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்