விமானநிலையத்தில் கொரியரை திறந்து பார்த்த அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி! அதன் பின் தெரிந்த உண்மை

Report Print Santhan in ஏனைய நாடுகள்

தாய்லாந்தில் கொரியர் ஒன்றை அதிகாரிகள் திறந்து பார்த்த போது, அதில் இருந்த பொம்பையைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தாய்லாந்து தலைநகர் பேங்காங்கில் இருக்கும் Suvarnabhumi விமானநிலையத்தில், வழக்கம் போல் அதிகாரிகள் அங்கிருந்து செல்லும் கொரியர்களை ஸ்கேன் செய்து பார்த்துள்ளனர்.

(Picture: ViralPress)

அப்போது குறித்து கொரியர் ஒன்றில் பிறந்த குழந்தை ஒன்று இறந்திருப்பது போன்று தோன்றியதால், அதைக் கண்ட அதிகாரிகள் உடனடியாக உள்ளே என்ன இருக்கிறது என்பதற்காக திறந்து பார்த்துள்ளனர்.

அப்போது பிறந்த குழந்தை போன்று மண்டை ஓட்டுடன் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனால் அது என்ன என்பது குறித்து சோதனை செய்த போது, அது உண்மையான குழந்தை கிடையாது, பொம்பை எனவும், ரெசினால் செய்யப்பட்டது என்பதும் தெரியவந்துள்ளது.

(Picture: ViralPress)

அந்த பொம்பை இருந்த கொரியரில் இது உங்களுடன் இருந்தால் எந்த ஒரு கெட்ட சக்தியும் அண்டாது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த கொரியர் அமெரிக்காவின் புளோரிடாவில் இருக்கும் ரொனால்ட் லீக் என்பவருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

(Picture: ViralPress)

இது குறித்து பொலிசார் Major Krit Khunnavech கூறுகையில், இதைக் கண்டு ரொனால்ட் லீக் மிகவும் வேதனையடைந்திருக்கலாம், ஆனால் இது போன்ற பொருட்கள் எல்லாம் சர்வதேச அளவில் அனுப்புவதற்கு தடை உள்ளது, அதாவது சாதரணமாக இருந்தால் கூட ஒன்றுமில்லை, ஆனால் அது இறந்த குழந்தை போன்று இருந்ததால், இதை மீண்டும் எங்கிருந்து வந்ததோ அங்கே அனுப்பிவிட்டதாக தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...