தாயை பலாத்காரம் செய்தவனை காத்திருந்து பழி தீர்த்த 18 வயது மகன்! நடுவீதியில் பயங்கரம்

Report Print Santhan in ஏனைய நாடுகள்

இந்தோனேஷியாவில் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு தாயை பாலியல் பலாத்காரம் செய்த கொடூரனை அவரது மகன் காத்திருந்து பழிவாங்கிய சம்பவம் தற்போது தெரியவந்துள்ளது.

இந்தோனேஷியாவின் East Java மாகாணத்தில் இருக்கும் Pasuran நகரை சேர்ந்தவர் Maulud Riyanto. 18 வயதான இளைஞன் 49 வயது மதிக்கத்தக்க Yasin Fadilla என்பவரை கொடூரமாக வீதியில் குத்தியுள்ளான்.

இது குறித்து அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில், குறித்த இளைஞனின் தாயை அந்த நபர் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

அப்போது Maulud Riyanto-க்கு 12 வயது என்பதால், அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஆனால் இது குறித்து அங்கிருந்த பெரியவர்களால் பஞ்சாயத்து செய்யப்பட்டு தீர்க்கப்பட்டுள்ளது.

Maulud Riyanto (Image: AsiaWire)

இருப்பினும், இதை மனதில் வைத்து கொண்டு, தாயை பாலியல் பலாத்காரம் செய்த இந்த கொடூரனுக்கு தண்டனை கொடுத்தே ஆக வேண்டும் என்று கண்காணித்து வந்துள்ளான்.

அதன் படி சம்பவ தினத்தன்று Yasin Fadilla தன்னுடைய உறவினர் ஒருவரின் வீட்டிற்கு செல்வதற்காக இரு சக்கர வாகனத்தில் வீதி ஒன்றில் தனியாக சென்ற போது, அவரை வழி மறித்து இளைஞன் பல முறை கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளான்.

இந்த சம்பவம் குறித்து உடனடியாக தெரிவிக்கப்பட்டதால் பொலிசார் குறித்த இளைஞனை உடனடியாக கைது செய்யுள்ளனர். கைதின் போது இளைஞன் அவன் என் அம்மாவை 6 ஆண்டுகளுக்கு முன்பு பாலியல் பலாத்காரம் செய்த போதே அவன் மீது வெறுப்பு ஏற்பட்டது, அதன் காரணமாகவே இப்படி செய்தேன் என்று கூறியுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...