பரபரப்பான சாலையில் பாலத்திலிருந்து குதிக்க முயன்ற பெண்: ட்ரக் சாரதியின் சமயோகித முடிவு!

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

அயர்லாந்தில் பரபரப்பான சாலையின் மீது அமைந்திருந்த பாலத்திலிருந்து குதிக்க முயன்ற ஒரு பெண், ட்ரக் சாரதி ஒருவரின் சமயோகித முடிவால் காப்பாற்றப்பட்டார்.

டப்ளின் அருகே உள்ள பரபரப்பான சாலை ஒன்றில் வாகனம் ஓட்டிக்கொண்டிருந்த சாரதிகள், தங்களுக்கு எதிரே அமைந்துள்ள பாலத்தின் மீதிருந்து தங்கள் கண் முன் ஒரு பெண் குதிக்க முயல்வதைக் கண்டு செய்வதறியாது திகைத்தனர்.

சட்டென அவருக்கு உதவ முடியாத சூழலில் என்ன செய்வது என அனைவரும் திகைத்து நின்றபோது, நடக்கப்போவதை சரியாக கணித்த ஒரு ட்ரக்கின் சாரதி, பாலத்தின் கீழே அந்த பெண் அமர்ந்திருந்த இடத்தின் கீழ் தனது ட்ரக்கை கொண்டு நிறுத்திவிட்டார்.

அப்படியே அந்த பெண் குதித்தாலும், ட்ரக் மீதுதான் விழுவார் என்பதால் மற்றவர்கள் அவரை எளிதாக காப்பாற்றி விடலாம்.

ட்ரக் சாரதியின் சமயோகித புத்தியை அனைவரும் பாராட்டினர்.

அத்துடன் ட்ரக் சாரதி ட்ரக்கை பாலத்தின் கீழ் நிறுத்தியுள்ள அந்த படம் சமூக ஊடகத்தில் பகிரப்பட, அவர் ஒரு உயிரைக் காப்பாற்றியுள்ளார் என்று பாராட்டியுள்ள பலரும், அவர் பல்லாண்டு வாழவேண்டும் என மனதார வாழ்த்தியுள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...