கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவிப்பது பாவச் செயல்: வெளிநாடு வாழ் இந்தியரின் கருத்தால் சர்ச்சை!

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சமூக வலைத்தளத்தில் வெளிநாடு வாழ் இந்தியரான இஸ்லாமிய மதபோதகர் ஒருவர் இட்ட பதிவு ஒன்று, மீண்டும் சமூக வலைத்தளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்திவருகிறது.

மதபோதகரான ஜாகிர் நாயக் என்னும் அந்த நபர், இஸ்லாமியர்கள் எவரும் கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவிக்கக் கூடாது என அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2016ஆம் ஆண்டு அவர் ட்விட்டரில் பதிவிட்டதாகக் குறிப்பிட்டு, சமூக வலைத்தளங்களில் தற்போது அந்த தகவல் பரவி வருகிறது.

எனதருமை இஸ்லாமியர்களே, கிறிஸ்துமஸ் வாழ்த்து சொல்வதை தயவு செய்து தவிர்த்திடுங்கள், அது மிகப்பெரிய பாவச்செயல்.

கிறிஸ்துமஸ் இஸ்லாத்துக்கு எதிரானது, இந்தச் செய்தியை நீங்களும் மறுபதிவிட்டு பரவச் செய்யுங்கள் என்று ஜாகிர் நாயக் அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Cover image via Dr Zakir Naik - True Islamic Orator/Facebook

கடந்த 2016ஆம் ஆண்டு, ஜாகிர் நாயக்கின் இந்தப் பதிவை குறிப்பிட்டு ஆப்பிரிக்க பத்திரிகை ஒன்றில் கட்டுரை ஒன்று வெளியானது.

தற்போது அந்தக் கட்டுரையையும் பலர் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

மேலும், ஜாகிர் நாயக் கருத்துகளைத் தொடர்ந்து வெளியிட்டு வரும் ஒரு தொலைக்காட்சி அலைவரிசையில், அவரது இந்தச் செய்தியுடன் ஒளிபரப்பப்பட்ட வீடியோ ஒன்றும் வேகமாகப் பரவி வருகிறது.

இந்நிலையில் ஜாகிர் நாயக்கின் கிறிஸ்துமஸ் வாழ்த்து தொடர்பான கருத்துக்கு, மலேசிய முன்னாள் அமைச்சர் Tan Sri Dr Rais Yatim சரியான பதிலடி கொடுத்துள்ளார்.

ஜாகிர் நாயக் இதைத்தான் தெரிவித்தார் என்றால் இந்நாட்டில் உள்ள அனைத்து முஃப்திக்களும் உடனடியாக தங்களது ஓய்வூதிய பலன்களை பெற்றுக்கொண்டு பணியில் இருந்து ஓய்வு பெறுவது நல்லது என்று சமூக வலைத்தளப் பதிவு ஒன்றில் Rais Yatim குறிப்பிட்டுள்ளார்.

அடுத்து, சீனப் பெருநாள் வாழ்த்துகள், மற்றும் தீபாவளிக்கும் அவர் இதே கருத்தைத் தெரிவிக்கக் கூடும்.

எனவே, அவர் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்படவேண்டும் என்பதை மீண்டும் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஜாகிர் நாயக் மலேசியாவில் நிரந்தரமாக வசிக்கும் உரிமையை எவ்வாறு பெற்றார்? யார் அவருக்கு அதை அளித்தது என்பதை எவரேனும் உள்துறை அமைச்சகத்தில் உறுதி செய்ய இயலுமா, என்று Rais Yatim தமது பதிவில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

சரியாக கிறிஸ்துமஸ் பண்டிகை கால கட்டத்தில் இந்த சர்ச்சை செய்தி வேகமாக பரவி வருகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...