இந்தியாவுக்கு கடத்திவரப்பட்ட ஆப்பிரிக்க இளம்பெண்கள்: எதற்காக தெரியுமா?

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

இந்தியாவில் வாழும் ஆப்பிரிக்க ஆண்களை மகிழ்விப்பதற்காக, ஆப்பிரிக்காவில் இருந்து இளம்பெண்கள் கடத்தி வரப்படும் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.

ஆப்பிரிக்காவில் இருந்து இளம்பெண்களை ஆசை காட்டி கவர்ந்துவந்து, இந்தியாவில் வசிக்கும் ஆப்பிரிக்க ஆண்களை மகிழ்விப்பதற்காக பாலியல் தொழிலில் கட்டாயப்படுத்தி ஈடுபடுத்தும் சட்டவிரோத வலைப்பின்னல் ஒன்றை பிபிசி ஆப்பிரிக்கா ஐ என்ற அமைப்பு கண்டுபிடித்துள்ளது.

இந்த இளம்பெண்கள், பெரும்பாலும் கென்யா, உகாண்டா, நைஜீரியா, தான்சானியா மற்றும் ருவாண்டாவில் இருந்து கொண்டுவரப்பட்டவர்கள் ஆவர்.

வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தருவதாக அழைத்துக்கொண்டு வரப்படும் இந்த இளம்பெண்கள், பின்னர் அவர்களை அழைத்து வந்ததற்கான பணத்தை திரும்ப தரும்படி கட்டாயப்படுத்தப்படுவர்.

அவர்களது ஆவணங்கள் மற்றும் பாஸ்போர்ட் பறிக்கப்படும். வேறு வழியின்றி தங்கள் கடனை அடைப்பதற்காக, பாலியல் தொழிலில் அவர்கள் ஈடுபடுவர்.

இந்த பிரச்சினையை ரகசியமாக செயல்பட்டு வெளிக்கொண்டு வருவதற்காக, கென்யாவில் இருந்து கடத்திக்கொண்டுவரப்பட்ட கிரேஸ் என்னும் துணிச்சலான பெண் ஒப்புக்கொண்டதையடுத்து இந்த விடயம் வெளியில் வந்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்