என் அம்மா எங்கே?... வான்வழி தாக்குதலில் சிக்கி போராடிய சிறுமி: மனதை உருக்கும் வீடியோ

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

ரஷ்ய ஆதரவு படைகள் நடத்திய வான்வழி தாக்குதலில், இடர்பாடுகளில் சிக்கி போராடிய சிறுமி நீண்ட நேரத்திற்கு பின் மீட்கப்பட்டுள்ளார்.

சிரியாவில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள இட்லிப் மாகாணத்தில் கடந்த திங்கட்கிழமை முதல் நடத்தப்பட்ட தாக்குதலில் குறைந்தபட்சம் 50 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இதில் கடந்த வியாழக்கிழமையன்று நடத்தப்பட்ட இரண்டு வான்வழி தாக்குதலில் 16 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தின் போது, இடர்பாடுகளில் சிக்கிய ஒன்பது வயது சிறுமி இஸ்லாம் ஹப்ரா நீண்ட நேர போராட்டத்திற்கு பின் மீட்கப்பட்டுள்ளார்.

அவர் மீட்கப்படும் வீடியோ காட்சியானது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அதில், "என் அம்மா எங்கே?" என ஒன்பது வயது இஸ்லாம் ஹப்ரா கண்ணீருடன் மூச்சு திணறியபடியே கேட்கிறார்.

வெள்ளை ஹெல்மட் அணிந்திருந்த மீட்பு ஊழியர் அப்துல்லா, "அழாதே, அன்பே" என பேச்சு கொடுத்துக்கொண்டே சிறுமியை மீட்கிறார்.

இதுகுறித்து அப்துல்லா கூறுகையில், நாம் ஒருவரை மீட்கும் பணியில் ஈடுபட ஆரம்பித்துவிட்டால், கடைசிவரை அவருடன் பேச்சுக்கொடுத்து கொண்டிருக்க வேண்டும். இந்த தாக்குதலில் ஹப்ராவின் தாய் இறந்துவிட்டார். அவருடன் மூன்று மற்றும் ஒன்பது வயதுடைய இரண்டு குழந்தைகளும் கொல்லப்பட்டனர்.

ஆனால் மீட்பு பணியின் போது, அவளுடைய தாய் கொல்லப்பட்டாள் என்று அவளிடம் சொல்ல முடியவில்லை. அவள் இருந்த நிலைமையை அவளுக்கு மறக்கச் செய்ய நாங்கள் முயற்சித்தோம் எனக்கூறியுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...