வெளிநாட்டில் பதுங்கியிருக்கும் நித்தியானந்தா! சத்சங்கத்தில் கள்ள உறவு பற்றி விளக்கம்

Report Print Santhan in ஏனைய நாடுகள்

வெளிநாட்டில் இருக்கும் நித்தியானந்தா கைலாசம் திறந்து விட்டதாக கூறி சீடர்களிடம் காட்டி வரும் வீடியோ வைரலாகி வரும் நிலையில், இன்று அவர் கள்ள உறவை பற்றி பேசியுள்ளார்.

தமிழகத்தை சேர்ந்த நித்தியானந்தா மீது இந்தியாவில் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு உள்ளது. குழந்தை கடத்தல், பாலியல் துன்புறுத்தல், ஓரினசேர்க்கையாளர் என்றெல்லாம் கூறப்படுகிறது.

ஆனால் இதை எல்லாம் நித்தியானந்தா காதில் வாங்கிக் கொள்ளாமல், இந்தியாவை விட்டு தப்பி வெளிநாட்டில் ஏதோ ஒரு தீவில் பதுங்கியுள்ளார். அங்கிருந்த படி தினந்தோறும் வீடியோ வெளியிட்டு வரும் அவர், இன்று சத்சங்கத்தில் கள்ள உறவு பற்றி கூறியுள்ளார்.

அதில், ஒருவர் கொடுத்த கமிட்மெண்ட்டுக்கு நேர்மையாக இருந்தால் அது நல்ல உறவு, கொடுத்த கமிட்மெண்ட்டுக்கு யார் நேர்மையாக இல்லையோ அது கள்ள உறவு என்று கூறியுள்ளார். இதை இணையவாசிகள் இது எங்களுக்கு தெரியாதா என்பது போல் கிண்டலாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

மேலும் நித்தியானந்தா தீவில் இருக்கும் போது, அங்கிருந்த சீடர்களிடம் கைலாசம் திறந்துவிட்டதாக கூற, வர்களும் ஆமாம் ஆமாம் என்று பதிலளிக்க, இதையும் நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்