பாகிஸ்தானில் பேராசிரியருக்கு மரணதண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு! என்ன தவறுக்காக தெரியுமா?

Report Print Santhan in ஏனைய நாடுகள்

பாகிஸ்தானில் மதத்தை பழித்து பேஸ்ப்க்கில் பதிவு வெளியிட்ட வழக்கில் பல்கலைக்கழக பேராசிரியருக்கும் தூக்கு தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

பாகிஸ்தானில் இருக்கும் முல்தான் பஹாயுதீன் ஜக்காரியா பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கிய துறையில் பேராசிரியராக பணியாற்றியவர் ஜூனைத் ஹபீஸ்.

இந்நிலையில் ஜூனைத் ஹபீஸ் பேஸ்புக் பக்கத்தில், மத விரோத கருத்துகளை வெளியிட்டதாக கூறி அவர் மீது கடந்த 2013-ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

பாகிஸ்தானை பொறுத்தவரை மத விரோத கருத்துகளை வெளியிடுவது கடும் குற்றம் எனவும், இந்த குற்றத்தை செய்து, அது நிரூபிக்கப்பட்டால் தூக்கு தண்டனை விதிப்பது வழக்கம்.

அந்த வகையில் இந்த வழக்கு முல்தான் நகரில் உள்ள மாவட்ட செசன்ஸ் நீதிமன்றத்தில் 2014-ம் ஆண்டு முதல் நடந்து வந்தது. விசாரணை தற்போது முடிவடைந்த நிலையில், ஜூனைத் ஹபீஸ் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு நீதிமன்ற்ம தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியதோடு, 5 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்துள்ளது.

இதையடுத்து குறித்த நபரின் வழக்கறிஞர் இதை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்போவதாகவும், அவர் தவறாக தண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் கடந்த 2017-ஆம் ஆண்டு, அப்துல் வாலிகான் பல்கலைக்கழக மாணவர் மா‌‌ஷல் கான் என்பவர் சமூக வலைத்தளங்களில் மத விரோத கருத்துகளை வெளியிட்டதற்காக அடித்துக்கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்