உலகநாடுகளுக்கு எச்சரிக்கை... மீண்டும் வரும் ஐ.எஸ் தீவிரவாதிகள்! பதுங்கியிருக்கும் இடம் பற்றி தகவல்

Report Print Santhan in ஏனைய நாடுகள்

உலகநாடுகளை மிரட்டி வந்த ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு அழிந்து வருவதாக அமெரிக்கா போன்று நாடுகள் கூறி வந்த நிலையில், தற்போது அந்த மீண்டும் உயிர்த்தெழுவதாக தகவல்கள் வெளியாகி

உலகில் மிகவும் ஆபத்தான பயங்கராவாத அமைப்பாக இருந்து வந்தது ஐ.எஸ் என அழைக்கப்படும், இஸ்லாமிக் ஸ்டேட் பயங்கரவாத அமைப்பு.

இந்த அமைப்பு தற்கொலைப்படை தாக்குதல் நடத்துவதல் கைதேர்ந்த அமைப்பாக இருந்ததால், ஆயிரக்கணக்கானர்களின் உயிர்களை பறித்துள்ளது.

இதையடுத்து கடந்த 2014-ஆம் ஆண்டு சிரியா மற்றும் ஈராக்கின் சில பகுதிகளை கைப்பற்றி இஸ்லாமிய தேசத்தை உருவாக்கியதாக அறிவித்தது.

இது மிகவும் ஆபத்து என்பதால், உலகின் பல்வேறு நாடுகள் ஐ.எஸ் தீவிரவாதிகள் இருக்கும் இடத்தை நோக்கி தாக்குத நடத்தியதால், ஐ.எஸ் அமைப்பின் ஆதிக்கம் குறைந்து வந்தது.

அதுமட்டுமின்றி, சமீபத்தில் ஐஎஸ் அமைப்பின் தலைவர் அபுபக்கர் பாக்தாதி கொல்லப்பட்டதாக அமெரிக்க அறிவித்தது. இதைத் தொடர்ந்து இனி ஐ.எஸ் அமைப்பு படிப்படியாக அழிந்துவிடும் என்று அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தெரிவித்தனர்.

இந்நிலையில் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு ஈராக்கில் மீண்டும் உயிர்த்தெழ தொடங்கி இருப்பதாக குர்து படையினர் மற்றும் மேற்கத்திய நாடுகளின் உளவுத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அதில், ஈராக்கின் மலைப்பிரதேசங்களில் ஐஎஸ் நடமாட்டம் அதிகமாக உள்ளது, பயங்கரவாதிகள் முன்பை விட திறன் வாய்ந்தவர்களாகவும் தொழில்நுட்ப அறிவு மிகுந்தவர்களாகவும் இருக்கின்றனர். அல்கய்தாவைவிட ஆபத்தானவர்களாக இவர்கள் வடிவம் பெற்றுள்ளதாக குர்துக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

முன்பை விட இப்போது அதிக நிதி இவர்களிடம் இருப்பதாகவும் அதனைக் கொண்டு நவீன ஆயுதங்களை வாங்கி இருப்பதால், தற்போதைக்கு ஐ.எஸ் பயங்கரவாதிகளை அழிப்பது மிகவும் கடினம் என்று வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் மலைப்பகுதியில் இருக்கும் இவர்கள், அங்கு தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருவதாகவும், அடுத்த ஆண்டு இந்த பயங்கரவாதிகள் மிகத் தீவிரமாக இயங்கத் தொடங்குவார்கள் என்று கூறப்படுகிறது.

ஈராக் படையினருக்கும், குர்து படையினருக்கும் இடையே ஒற்றுமை இல்லாமல் போனது, ஈராக்கில் நிலவும் அரசியல் ஸ்திரமற்ற தன்மை உள்ளிட்டவை பயங்கரவாதிகள் மீண்டு வர காரணமாக அமைந்துள்ளது. அதோடு ஈராக் அரசு மீது அதிருப்தி தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள் பயங்கரவாதிகளால் மூளைச்சலவை செய்யப்படலாம் என்ற அச்சமும் எழுந்துள்ளது.

ஈராக்கில் மட்டும் தற்போது சுமார் 5000 பயங்கரவாதிகள் இருப்பார்கள் எனவும் இது ஈராக்கிற்கான பிரச்னை மட்டுமே அல்ல, ஐஎஸ் அமைப்பு மீண்டு வருவது உலக நாடுகளுக்கே மிகப்பெரிய அச்சுறுத்தல் என்று வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...