கிறிஸ்மஸ் அன்று 11 கிறிஸ்தவ பணயக்கைதிகளை துடி துடிக்க கழுத்தறுத்து கொன்று பழிதீர்த்த ஐ.எஸ்.. உறைய வைக்கும் படம்

Report Print Basu in ஏனைய நாடுகள்

நைஜீரியாவில் கிறிஸ்மஸ் தினத்தன்று 11 கிறிஸ்தவ பணயக்கைதிகள் ஐ.எஸ் பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஈராக் மற்றும் சிரியாவில் தங்கள் தலைவர்களான அபுபக்கர் அல்-பாக்தாதி மற்றும் அபுல்-ஹசன் அல் முஹாஜிர் ஆகியோரைக் கொன்றதற்கு பழிவாங்குவதற்காக கைதிகளை கொன்றதாக ஐ.எஸ்-ன் மேற்கு ஆபிரிக்க மாகாண பிரிவு கூறியுள்ளது.

புதன்கிழமை வெளியிடப்பட்ட ஒரு வீடியோவில் 13 பிணைக் கைதிகள் கழுத்தறுக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 10 பேர் கிறிஸ்தவர்கள் மற்றும் மூன்று முஸ்லிம்கள் என்று நம்பப்படுகிறது.

மற்ற இரண்டு முஸ்லிம்களை ஐ.எஸ் கொல்லாமல் மன்னித்து விட்டதாக உள்ளுர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பிணைக் கைதிகள் தங்களது விடுதலை குறித்து பேச்சுவார்த்தை நடத்துமாறு நைஜீரியாவின் கிறிஸ்துவ அமைப்புகளிடம் கெஞ்சுவதை காட்டும் வீடியோ சமீபத்தில் வெளியானதை அடுத்து இந்த படுகொலை நிகழ்த்தப்பட்டுள்ளன.

ஐ.எஸ்-ன் மேற்கு ஆபிரிக்க மாகாண பிரிவு வெளியிட்ட அறிக்கையில், ஈராக் மற்றும் சிரியாவில் அபுபக்கர் அல்-பாக்தாதி மற்றும் அபுல்-ஹசன் அல்-முஹாஜிர் உள்ளிட்ட எங்கள் தலைவர்களின் கொலைகளுக்கு பழிவாங்க நாங்கள் அவர்களைக் கொன்றோம் என தெரிவித்துள்ளது.

இப்படுகொலை தொடர்பில் ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

dailymail

அவரின் செய்தி தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது: வடகிழக்கு நைஜீரியாவின் வடக்கு போர்னோ மாநிலத்தில் ஆயுதக் குழுவால் பொதுமக்கள் கொல்லப்பட்டனர், மற்றவர்கள் கடத்தப்பட்டுள்ளனர் என்ற செய்திகள் குறித்து பொதுச்செயலாளர் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளார்.

பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்த அவர், மக்கள் மற்றும் நைஜீரியா அரசாங்கத்துடன் ஐக்கிய நாடுகளின் ஒற்றுமையை மீண்டும் வலியுறுத்துகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நைஜீரியாவில் இராணுவம் மற்றும் பொதுமக்களை குறிவைத்து தாக்குதல்களை நடத்த, ஜிகாதிஸ் போகோ ஹராம் மற்றும் ஐ.எஸ்-ன் மேற்கு ஆபிரிக்கா மாகாண பிரிவு சமீபத்தில் முடுக்கிவிட்டன என்பது கவனிக்கத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்