நீண்ட ஆயுளுக்கு குறிப்பு வழங்கும் போதே மாரடைத்து மேடையிலே உயிர்விட்ட பிரபல நிறுவனத்தின் தலைவர்: துயர காட்சி

Report Print Basu in ஏனைய நாடுகள்
152Shares

சுகாதார நிறுவனத்தின் தலைவர், 65, நீண்ட ஆயுளைப் பற்றிய குறிப்புகளைக் கொடுக்கும் போது மேடையில் மாரடைப்பால் இறந்துவிடுகிறார்

சீன சுகாதார நிறுவனத்தின் தலைவர் நிகழ்ச்சியில் நீண்ட ஆயுளைப் பற்றிய குறிப்புகளைக் கொடுத்த கொண்டிருந்தபோதே மாரடைப்பு ஏற்பட்டு மேடையில் சரிந்து உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

65 வயதான சென் பீவன், பாரம்பரிய சீன மருந்து தயாரிப்புகளை விற்பனை செய்யும் நிறுவனத்தின் தலைவராக இருந்தார்.

கடந்த மாதம் தெற்கு சீனாவில் நடந்த ஒரு நிகழ்வின் போது பார்வையாளர்களுக்கு முன்னால் மேடையிலே சரிந்து உயிரிழந்தார்.

சென், தெற்கு மாகாணமான குவாங்டாங்கை தளமாகக் கொண்ட ஜொங்கி ஹெல்த் அண்ட் டெக்னாலஜி நிறுவனத்தின் தலைவர் ஆவார்.

நிறுவனம் ஆகஸ்டில் நிறுவப்பட்டது. இதன் முக்கிய தயாரிப்பு டானிக் ஒரு பாட்டில் ஒன்றுக்கு 65 பவுண்ட் ஆகும், பல விலைமதிப்பற்ற மூலிகைகள் கொண்ட இந்த டானிக் கீல்வாதத்திற்கு சிகிச்சையளிக்க உதவும்.

சம்பவம் குறித்து சுகாதார நிறுவனத்தின் ஊழியர்கள் கூறியதாவது, சென் நவம்பர் 17 அன்று புஜியான் மாகாணத்தின் ஜாங்ஜோவில் நிறுவனத்தின் விளம்பர நிகழ்ச்சியில் கலந்து கொண்டார், அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது.

பேசும் மேசைக்குத் திரும்பிச் செல்லும்போது அவர் மேடையில் கீழே விழுந்து உயிரிழந்தார் என தெரிவித்துள்ளனர்.

சென், 20 ஆண்டுகளுக்கு முன்பு இதய பைபாஸ் அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டதாகவும், இதயமுடுக்கி பொருத்தப்பட்ட பின்னர் மருத்துவமனைக்கு செல்ல திட்டமிட்டதாகவும் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி வு தியான்ராங் கூறினார்.

அறுவை சிகிச்சையை தாமதப்படுத்த வேண்டாம் என்று மருத்துவர்கள் செனை வலியுறுத்தியதாகவும். இருப்பினும், திடீரென்று இது நடக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை என அவர் கூறினார்.

சென் ஒரு சுகாதார நிபுணர் மற்றும் அவரது சொந்த நிறுவனத்தின் டானிக் எடுத்துக் கொண்டு இறந்துவிட்டார் என்ற வதந்திகளை நிறுவனம் மறுத்தது. சென் ஆறு பில்லியன் யுவான் சொத்து வைத்திருக்கிறார் என்ற கூற்றையும் அது நிராகரித்தது.

இந்த காட்சிகள் இணையத்தில் எவ்வாறு பரவின என்பது தெரியாது என்றும் அது அதன் போட்டியாளர்களால் தொடங்கப்பட்ட ஒரு அப்பட்டமான பிரசாரம் என்று சந்தேகிப்பதாகவும் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்